இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா1 ரன்னில் செஞ்சுரியை தவற விட்ட சச்சின்
லண்டன்:சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், யுவராஜ் சிங் ஆகிேயாரின் அபார ஆட்டத்தால், இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமண் செய்துள்ளது.
![]() |
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, முதலாவது ஒரு நாள் போட்டியில் கேவலமாக ஆடி தோற்றது. இந்த நிலையில் நேற்று பிரிஸ்டல் மைதானத்தில் 2வது ஒரு நாள் போட்டி நடந்தது.
இப்போட்டியில் முதலில் இந்தியா பேட் செய்தது. கங்குலியும், டெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி அடித்து விளையாட ஆரம்பித்தனர். குறிப்பாக டெண்டுல்கர் சிறப்பாக ஆடினார். கங்குலியும் அழகான சில ஷாட்களை விளாசினார்.
இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 113 ரன்களைக் குவித்தனர். இந்த நிலையில் கங்குலி 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறு முனையில் ெசஞ்சுரியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார் டெண்டுல்கர்.
கங்குலி போன பின்னர் யுவராஜ் சிங்குடன் இணைந்து தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் சச்சின். இந்த நிலையில் 99 ரன்கள் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஆனால் அவர் உண்மையிலேயே அவுட்தானா என்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இறங்கிய கேப்டன் டிராவிட் படு ஆக்ரேஷமாக ஆடினார். படு வேகமாக ஆடிய டிராவிட் 63 பந்துகளில் 92 ரன்களை குவித்தார். யுவராஜ் 49 ரன்கள் எடுத்தார். டோணி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். திணேஷ் கார்த்திக் 1 ரன்னோடு திரும்பினார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 329 ரன்களைக் குவித்தது இந்தியா. பிளின்டாப் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இங்கிலாந்தும் அதிரடியாக ஆட்டத்தைக் காட்டியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆலிஸ்டர் குக் 36 ரன்களும், மாட் பிரியர் 33 ரன்களும் சேர்த்தனர்.
இயான் பெல் 64 ரன்களைக் குவித்தார். பீட்டர்சன் 25, காலிங்வுட் 27 ரன்கள் சேர்த்தனர்.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வென்று விடுமோ என்று இந்திய ரசிகர்கள் பயந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இங்கிலாந்தின் ரன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்தின் இன்னிங்க்ஸ் 320 ரன்களோடு நின்றுபோனது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 7 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு 1 என்ற கணக்கில் சமண் செய்தது.
ராகுல் டிராவிட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3வது ஒரு நாள் போட்டி எட்பாஸ்டனில் திங்கள்கிழமை நடக்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
