For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கயும் இந்தியாதான் சாம்பியன்.. பார்வையற்றவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி!

பார்வையற்றவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறது.

By Shyamsundar

ஷார்ஜா: ஐக்கிய அரபு அமிரகத்தில் கடந்த சில வாரங்களாக பார்வையற்றவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. ஏ அணிகள் விளையாடும் போட்டியை போலவே இந்த போட்டியும் சுவாரசியமாக இருந்தது.

முக்கியமாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்பு மோதிக் கொண்ட போட்டி மிகவும் திரில்லாக சென்றது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது.

அந்த போட்டிக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லாத வகையில் இறுதி போட்டி நடந்தது. இதில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்று இருக்கிறது.

இந்தியா டாஸ்

இந்தியா டாஸ்

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் இந்தியா டாஸ் வெற்றி பெற்று பவுலிங் தேர்வு செய்தது. இந்திய பவுலிங் இதில் தொடக்கத்தில் இருந்து அபாரமாக இருந்தது.

இலக்கு

இலக்கு

இந்தியா நன்றாக பந்து வீசினாலும் பாகிஸ்தான் அதிக ரன்கள் அடித்தது. 40 ஓவர் முடிவில் பாகிஸ்தான் மொத்தம் 308 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் தீபக் மாலில், ராம்பிர் தலா இரண்டு விக்கெட்கள் எடுத்தனர்.

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

309 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா ஆரம்பமே அதிரடி காட்டியது. சுனில் ரமேஷ் அதிரடியாக ஆடி 67 பந்தில் 93 ரன்கள் அடித்தார். அதேபோல் அஜய் ரெட்டி 60 பந்தில் அதிரடியான 62 ரன்கள் அடித்தார்.

வெற்றி

வெற்றி

இவர்களின் அதிரடி காரணமாக இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. கடைசி ஐந்து ஓவர்கள் மிகவும் திரில்லாக இருந்தது. இருந்தாலும் 8 விக்கெட்டை இழந்து 38.3 ஓவரில் 309 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.

மீண்டும்

மீண்டும்

இந்தியா இரண்டாவது முறையாக இந்த உலகக்கோப்பையை வெல்கிறது. இதற்கு முன்பு 2014ல் தென்னாப்பிரிக்காவில் நடந்து போட்டியில் வென்றது. அப்போதும் பாகிஸ்தானை வீழத்தி கோப்பையை கைப்பற்றியது.

வாழ்த்து

வாழ்த்து

இந்திய அணிக்கு இதனால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சச்சின். ஹர்பஜன் சிங், தவான், சேவாக் என எல்லோரும் இவர்கள் ஆட்டத்தை பார்த்து வியந்து இருக்கிறார்கள். அதேபோல் பிரதமர் மோடி, மம்தா பேனர்ஜி, ராகுல் காந்தி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, January 21, 2018, 10:52 [IST]
Other articles published on Jan 21, 2018
English summary
Sunil Ramesh then blasted a scintillating 93 runs in 67 balls and skipper Ajay Reddy scored 62 in 60 balls as
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X