ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு கேப்டன் ரஹானே- டோணி, கோஹ்லி, ரோகித், அஸ்வினுக்கு 'ரெஸ்ட்'!!
டெல்லி: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஹானே அறிவிக்கப்பட்டுள்ளார். டோணி, விராட் கோஹ்லி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஜூலை 7-ந்தேதி ஜிம்பாப்வேக்கு புறப்படுகிறது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் தலைமையிலான குழுவினர் இந்திய அணியை தேர்வு செய்துள்ளது.

சீனியர்களுக்கு ஓய்வு
தொடர்ச்சியாக விளையாடுவதாலும், ஜிம்பாப்வே சிறிய அணி என்பதாலும் இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் டோணி, விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, தமிழக வீரர் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

புதிய கேப்டன்
இதனால் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதர வீரர்கள்
ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்: முரளி விஜய், அம்பாத்தி ராயுடு, மனோஜ் திவார், கேதார் ஜாதவ், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, ஹர்பஜன் சிங், அக்ஷர் படேல், கரண் சர்மா, தவால் குல்கர்னி, பின்னி, புவனேஷ்வர் குமார், மொகித் ஷர்மா, சந்தீப் சர்மா

3 ஒருநாள் போட்டிகள்
ஜூலை 10, ஜூலை 12, ஜூலை 14 ஆகிய நாட்களில் ஒருநாள் போட்டிகளில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன

2 டி20 போட்டிகள்
ஜூலை 17 மற்றும் 19 ஆகிய நாட்களில் டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன.


Click it and Unblock the Notifications