'இது டீம் மாதிரியே தெரியல'.. இந்திய அணியை கடுமையாக விமர்சனம் செய்த சோயிப் அக்தர், அப்ரிடி!
துபாய்: டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் இந்தியா மோசமாக செயல்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பேட்டிங் ஆர்டர் மாற்றியதே அணியின் சரிவுக்கு மிகப்பெரிய காரணமாகும். வழக்கமாக ஒப்பனராக விளையாடும் ரோகித் சர்மா ஒன்டவுன் வந்து ஏன் விளையாடினார்? என்று யாருக்கும் புரியவில்லை.

சோயிப் அக்தர் கருத்து
அனுபவமில்லாத இஷன் கிஷானை ஒப்பனராக இறக்கியதும் விமர்சனமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா மிகவும் சாதாரண அணியாக தோற்றமளித்தது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் திட்டங்கள் என்ன? என்பதை புரிந்து கொள்ள சிரமப்பட்டதாக கூறியுள்ளார்.
Recommended Video

எனக்கு புரியவில்லை
ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் விராட் கோலி போன்ற வீரர்கள் ஏன் தங்கள் பேட்டிங் நிலைகளை மாற்றினார்கள் என்பதை புரிந்து கொள்ள சிரமப்பட்டதாக தெரிவித்த அவர் இளம் வீரரான இஷான் கிஷன் அவர்களுக்கு முன்னாள் ஏன் அனுப்பப்பட்டார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஹர்திக் பாண்டியா கடைசியில்தான் பந்துவீசுகிறார். இந்தியா என்ன விளையாட்டுத் திட்டத்துடன் விளையாடுகிறது? என்று தனக்கு புரியவில்லை என்று அவர் கூறினார்.

மற்ற பவுலர்கள் எதுவும் செய்யவில்லை
இந்த போட்டியில் டாஸ் தோற்றதுமே இந்திய வீரர்களிடம் பயம் உண்டாக ஆரம்பித்து விட்டது. வீரர்கள் எல்லோரும் பதற்றதுடன் இருந்தனர் உங்களால் சரியாக பந்தை கனெக்ட் செய்ய முடியாவிட்டால் 20 ஓவர் வரை பொறுமையாக ஒரு பேட்ஸ்மேனாக விளையாடுங்கள். பவுலிங்கிலும் ஜஸ்பிரித் பும்ராதான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வருண் சக்ரவர்த்தியும் நன்றாக வீசினார். ஆனால் மற்ற பவுலர்கள் எதுவும் செய்யவில்லை. மொத்தத்தில் இந்தியா எனக்கு மிகவும் சாதாரண அணியாகத் தோன்றியது என்று சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

சாகித் அப்ரிடி
இதேபோல் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கூறுகையில், ' இந்தியாவுக்கு இன்னும் அரையிறுதிக்கு தகுதிபெற வெளியில் வாய்ப்பு உள்ளது, ஆனால் இந்த நிகழ்வில் அவர்கள் எப்படி விளையாடினார்கள் என்பதை வைத்து, அவர்கள் தகுதி பெறுவதைப் பார்ப்பது ஒரு அதிசயம்தான்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications