Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் தரவரிசை... முதலிடத்தை ஆஸ்திரேலியாவிடம் விட்டுக்கொடுத்தது இந்தியா

துபாய் : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த இந்திய அணி, தன்னுடைய முதலிடத்தை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்துள்ளது.

Recommended Video

ICC Test rankings India lose top Test spot to Australia for the first time

கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்தியா 3வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

விதிமுறைகளின்படி கடந்த 2016-17 ஆண்டின் சாதனைகள் நீக்கப்பட்டு ஐசிசியின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இந்தியா 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முதலிடம் வகித்த இந்தியா

முதலிடம் வகித்த இந்தியா

கடந்த 2016 முதல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியா, தற்போது முதல் இரண்டு இடங்களை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் பறிகொடுத்து மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த 2016-17 ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் அணிகள் மேற்கொண்ட சாதனைகள் விதிமுறைகளின்படி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து தற்போது இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐசிசி அறிக்கை வெளியீடு

ஐசிசி அறிக்கை வெளியீடு

கடந்த 2016-17ல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் 12 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 5 தொடர்களில் மோதி வெற்றி பெற்றது. இதேபோல அந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுடன் மோதி தோற்றது.

ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடம்

ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடம்

இதேபோல டி20 தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிலும் ஆஸ்திரேலியா முதல்முறையாக முதலிடம் பெற்றுள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தை பெற்றுள்ளது. டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆஸ்திரேலியா உள்ள நிலையில், 115 புள்ளிகளுடன் நியூசிலாந்தும் 114 புள்ளிகளுடன் இந்தியாவும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

முதலிடத்தில் இங்கிலாந்து

முதலிடத்தில் இங்கிலாந்து

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் 127 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியா 8 புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து உள்ளது. முதல் 10 இடங்கள் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது.

Story first published: Friday, May 1, 2020, 14:33 [IST]
Other articles published on May 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+