39 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த இந்தியா.. வாய்ப்பை வீணடித்த சூர்யகுமார், இஷான் கிஷன் கோலி ஏமாற்றம்
மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தடுமாறி வருகிறார்கள். மும்பையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது.
முகமது ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 129 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்த ஆஸ்திரேலிய அணி
188 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

இஷான் கிஷன்
ரோகித் சர்மா இல்லாததால், திறமையான இளம் வீரராக அறியப்படும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி கொண்டு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்டோனிஸ் பந்துவீச்சை எதிர்கொண்ட கிஷன்3 ரன்களில் வெளியேறினார்.

சூர்யகுமார்
இதனையடுத்து, இன்றைய ஆட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்தது சூர்யகுமார் யாதவை தான். முதல் முறையாக தனது சொந்த மண்ணில் இந்திய அணிக்காக சூர்யகுமார் விளையாடினார். மேலும் ஸ்ரேயாஸ் இல்லாத நிலையில், தனது இடத்தை சூர்யகுமார் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார்.

விராட் கோலி
இதே போன்று நட்சத்திர வீரர் விராட் கோலி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் சேஸிங்கில் எப்போதுமே கோலி மாஸ்டர். ஆனால் இன்று கோலியும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதுவும் ஸ்டார்க் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டால் கோலி விரைவில் ஆட்டமிழந்து விடுகிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

சுப்மன் கில்
தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் தனது விக்கெட்டை கொடுக்காமல் போராடினார். 31 பந்துகளை எதிர்கொண்ட சுப்மன் கில் 3 பவுண்டரிகளை அடித்து 20 ரன்கள் சேர்த்தார். இதனால் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications