Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா மோசமான தோல்வி... 22 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இந்தியா தோல்வி!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

Recommended Video

#BREAKING சென்னை சேப்பாக்கம் டெஸ்டில் தோற்றது இந்தியா!

சென்னையில் கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் இந்தியா இந்த தோல்வியை சந்தித்துள்ளது.

இங்கிலாந்து இந்திய அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது.

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் 578 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்களையும் அடித்து இங்கிலாந்து ரன் குவித்த நிலையில் தற்போது இந்த வெற்றியை அடைந்துள்ளது.

22 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வி

22 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வி

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தோல்வியை இந்தியா டெஸ்ட் போட்டியில் சந்தித்துள்ளது. கடந்த 1999ல் சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 12 ரன்களில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

178 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து

178 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து

இந்நிலையில் தற்போது 22 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து அணியுடனான போட்டியில் தோல்வி கண்டுள்ளது. இந்த போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்களை மட்டுமே எடுத்து சுருண்ட நிலையில், இந்தியாவின் வெற்றி குறித்து சிறிது நம்பிக்கை ஏற்பட்டது.

சிறப்பாக விளையாடுவோம்

சிறப்பாக விளையாடுவோம்

ஆயினும் இரண்டாவது இன்னிங்சில் பௌலர்கள் ஏற்படுத்திய தாக்கத்திற்கு சிறிதளவேனும் பேட்ஸ்மேன்கள் நியாயம் செய்யாததால் இந்த போட்டியில் மோசமான தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 3 போட்டிகளில் சிறப்பாக திருப்பி தாக்குவோம் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, February 9, 2021, 15:14 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+