Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரியும் விக்கெட்டுகள்.. இங்கிலாந்தையே கலங்க வைத்த லீட்ஸ் பிட்ச்.. இந்தியாவை காவு வாங்காமல் விடுமா?

லீட்ஸ்: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று (ஆக.25) தொடங்கியது.

லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்று, 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

 பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இப்போட்டியில் புஜாராவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் அல்லது மாயங்க் அகர்வால் அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாத ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அணியின் எந்தவிதம் மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.

 புஜாரா பரிதாபம்

புஜாரா பரிதாபம்

இந்நிலையில், இன்று 3வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். ஆனால், எதிர்பாராதவிதமாக லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதம் விளாசிய லோகேஷ் ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால், புஜாரா 2வது ஓவரிலேயே களமிறங்கினார். ஆனால், ஒன் டவுன் இறங்கி 9 பந்துகளை சந்தித்த புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கில் புஜாரா கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹெட்டிங்லே வேகப்பந்து வீச்சளர்களின் சொர்க்கபுரி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

 அன்றே தடுமாறிய இங்கிலாந்து

அன்றே தடுமாறிய இங்கிலாந்து

இதன் பிறகு, கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து, ஆண்டர்சனின் லைன் அன்ட் லெந்த் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த விக்கெட்டோடு சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சனிடம் 7வது முறையாக அவுட்டாகி வெளியேறி இருக்கிறார் விராட் கோலி. இதனால், இந்தியா தனது மூன்றாவது விக்கெட்டையும் இழந்திருக்கிறது. லீட்ஸ் பிட்ச் உண்மையில் எப்போதும் ஆக்ரோஷமான பிட்ச்சாகவே பார்க்கப்படுகிறது. இந்தியா 26 ரன்களுக்கு இன்று 3 விக்கெட்டுகளை இழந்தது பற்றி பேசி வருகிறோம். ஆனால், உள்ளூர் அணியான இங்கிலாந்தே, இங்கு டெஸ்ட் போட்டியில் வெறும் 67 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. அது ரொம்ப வருஷத்துக்கு முன்பு எல்லாம் இல்லீங்க. கடந்த 2019ம் ஆண்டில் தான்.

 மிகவும் குறைவான ஸ்கோர்

மிகவும் குறைவான ஸ்கோர்

இதே லீட்ஸ் ஹெட்டிங்லெ பிட்சில், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்தில் ஜோ டென்லிம் மட்டும் டபுள் டிஜிட் ஸ்கோர் எட்டினார். மற்ற அனைவரும் சிங்கிள் டிஜிட் ரன்னில் அவுட்டானார்கள். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் தனி ஆளாக நின்று 135 ரன்கள் விளாசி, இங்கிலாந்து அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற வைத்தது வேற கதை. அதேபோல், கடந்த 2016ம் ஆண்டு, இந்த பிட்சில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை 119 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்த பிட்சில் மிகவும் குறைவான ஸ்கோர் என்றால் அது 61 ரன்கள் தான். கடந்த 2000ம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 61 ரன்கள் எடுத்தது தான் இங்கு மிகவும் லோ ஸ்கோர் ஆகும். இந்நிலையில், இந்திய அணி தற்போது 30 ரன்களை அடிப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

தப்பிப் பிழைக்குமா இந்தியா?

Story first published: Wednesday, August 25, 2021, 16:59 [IST]
Other articles published on Aug 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+