Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியாவின் 'பிளான் ஏ' காலி.. 'பிளான் பி' ஒர்க் அவுட் ஆகுமா?

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இந்தியா தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. ஆனால், ஆரம்பமே அதிர்ச்சி தான்.

Recommended Video

2nd Test-ல் India-வை கைப்பற்றிய Bumrah - Shami Partnership.. நொந்துபோன England!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் 2வது டெஸ்ட் போட்டியில் மல்லுக்கட்டி வருகின்றன.

முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் அடித்ததன் மூலம், இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து. இந்த நிலையில் தான் இந்தியா தற்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

 ரோஹித் வீக் பாயிண்ட்

ரோஹித் வீக் பாயிண்ட்

இதில், தொடக்கமே இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஒண்ணுமில்ல ஜஸ்ட் எக்ஸ்ட்ரா pace பந்து தான். ஆனால், நல்ல லெந்த் பந்து அது. இதனால் அவுட்சைட் எட்ஜ் ஆனார் லோகேஷ் ராகுல். வெறும் 5 ரன்களில் அவரது இரண்டாம் இன்னிங்ஸ் பயணம் முடிவுக்கு வந்தது. அதேபோல், மார்க் வுட் வீசிய 146 கி.மீ வேக பந்தை, லெக் சைடில் 74 மீட்டரில் சிக்ஸருக்கு பறக்கவிட்ட ரோஹித், அதே ஓவரில் மீண்டும் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு 21 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற, இந்தியா தனது தொடக்க வீரர்கள் இருவரையும் இழந்துவிட்டது.

 பிளான் பி எடுபடுமா?

பிளான் பி எடுபடுமா?

எனினும், இந்தியா இந்த 2ம் இன்னிங்ஸுக்கு என்று வைத்திருக்கும் 'பிளான் ஏ' குறித்து நமக்கு சில தகவல் கிடைத்தது. அதன்படி, விரைவாக 3000 ரன்கள் அடிப்பது. இதன் மூலம், 270 - 320 ரன்கள் டார்கெட்டாக இங்கிலாந்துக்கு நிர்ணயித்து டிக்ளேர் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ரோஹித்தின் உதவியும் நாடப்பட்டது. லோகேஷ் சற்று பொறுமையாக விளையாட, ரோஹித் ஓரளவுக்கு ஸ்டிரைக் ரேட் மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

 180 - 200

180 - 200

ஆனால், பிளான் 'ஏ' இப்போதைக்கு ஏறக்குறைய முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. ஏனெனில், இரு தொடக்க வீரர்களையும் இந்திய அணி 30 ரன்களுக்குள் இழந்துவிட்டது. ஆகையால், மிடில் ஆர்டர் கொண்டு ஆணியை மீட்கவே இந்தியா இப்போது போராட வேண்டியிருக்கும். ஸோ, பிளான் 'ஏ' அல்மோஸ்ட் காலி. இருந்தாலும் கைவசம் இந்தியாவிடம் பிளான் 'பி' உள்ளது. அதாவது, இந்திய ஓப்பனர்கள் விரைவாக அவுட்டாகிவிட்டால், மிடில் ஆர்டர் அணியை மீட்கும் முழு பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்கொண்டு விக்கெட் விழாமல், 180 - 200 ரன்கள் வரை அணியை மீட்டெடுத்து செல்ல வேண்டும். அதன் பிறகு கியரை மாற்றி மிடில் ஆர்டர் வீரர்கள் (புஜாராவைத் தவிர) விளையாட வேண்டும்.

 300 ப்ளஸ்

300 ப்ளஸ்

பிறகு லோ ஆர்டரில் ரிஷப் பண்ட், ஜடேஜா மூலம் அணியை 300 ரன்களுக்கு மேல் விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும். ஒட்டுமொத்தமாக எப்பாடுபட்டாவது 330 ரன்களை எட்டிவிட வேண்டும் என்பதே பிளான் ஏ மற்றும் பிளான் பி-யின் அஜெண்டா. ஏனெனில், அப்போது தான் இங்கிலாந்துக்கு 300 ரன்கள் டார்கெட் செய்து டிக்ளேர் செய்ய முடியும். இந்த 300 ரன்களை கடைசி ஒரு நாளில் அடிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இங்கிலாந்து இருக்கும். அந்த குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி, லார்ட்ஸில் வெற்றி முத்திரையை பதித்தே தீர வேண்டும் என்பதே இந்திய அணியின் அல்டிமேட் எய்ம்.

இப்போது, இந்த நொடியில், அணியின் இரு ஓப்பனர்களும் காலி. மிடில் ஆர்டரும் ஃபார்மில் இல்லை. ஸோ, பிளான் பி ஒர்க் அவுட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Story first published: Sunday, August 15, 2021, 19:25 [IST]
Other articles published on Aug 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+