Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ரோகித் சர்மா இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் அடுத்தடுத்த 3 வீரர்கள் அவுட்டாகி வெளியேறியுள்ளனர். ஷிகர் தவான், கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் அவுட்டாகியுள்ளனர். தற்போது ரிஷப் பந்த் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடி வருகின்றனர்.

டி20 முதல் போட்டி

டி20 முதல் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவுள்ளதாக நேற்றைய தினம் விராட் கோலி அறிவித்திருந்தார்.

ரோகித் சர்மாவிற்கு ஓய்வு

ரோகித் சர்மாவிற்கு ஓய்வு

ஆனால் அவருக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஷிகர் தவான் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கி ஆடினர். ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் பௌலிங்கில் 2வது ஓவரிலேயே இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது.

இந்திய அணி திணறல்

இந்திய அணி திணறல்

இதை தொடர்ந்து ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இந்தியா இழந்துள்ளது. 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 48 ரன்களை எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிவந்த ரிஷப் பந்த்தும் அவுட்டாகியுள்ள நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடி வருகின்றனர்.

இந்தியா தவிப்பு

இந்தியா தவிப்பு

டெஸ்ட் போட்டித் தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, தற்போது டி20 தொடரின் முதல் போட்டியில் ஆடத்துவங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷ்ரயாஸ் ஐயர் அணிக்கு கைகொடுப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Story first published: Friday, March 12, 2021, 20:40 [IST]
Other articles published on Mar 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+