For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

22 வருடத்தில் முதல்முறை.. 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வி.. ஷாக்கிங்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்போட்டி சென்னையில் நடந்து முடிந்துள்ளது. சென்னையில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 நாள் ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி இந்திய அணியை திணற அடித்து உள்ளது.

இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் 100வது டெஸ்ட் ஆடிய கேப்டன் ரூட் 218 ரன்கள் எடுத்து கலக்கினார்.

கலக்கல்

கலக்கல்

அதன்பின் முதல் இன்னிங்கில் இந்திய அணியில் ரோஹித் 6, கோலி 11, கில் 29 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளனர். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடி வந்த பண்ட் 91 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். புஜாரா அதேபோல் 73 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

சுந்தர்

சுந்தர்

முதல் இன்னிங்சில் வாஷிங்க்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 85 ரன்களை எடுத்தார். அதன்பின் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அணி வேகமாக ஆடி ரன்களை குவிக்க முயன்றது. விக்கெட் சென்றாலும் 200 ரன்னாவது எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டது.

இரண்டாவது இன்னிங்ஸ்

இரண்டாவது இன்னிங்ஸ்

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 178 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவிற்கு இங்கிலாந்து 419 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட் எடுத்து அசத்தி உள்ளார். இதன்பின் பேட்டிங் இறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நேற்றே ரோஹித் 12 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட்டானார்.

இன்று

இன்று

இந்த நிலையில் இன்று இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. அதிலும் இந்திய அணி அதிகம் நம்பிய ரஹானே 0, புஜாரா 15, பண்ட் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். டாப் ஆர்டர் வீரர்கள் அவுட்டான காரணத்தால் டவுன் ஆர்டர் வீரர்கள் திணறினார். தனியாளாக கோலி மட்டும் போராடி வந்தார்.

கோலி

கோலி

தனி நபராக போராடி வந்த கோலி 72 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து டெயில் எண்ட் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 227 ரன்களை வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியது.

சென்னை

சென்னை

சென்னையில் 22 வருடங்களாக டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது இல்லை. இந்த நிலையில் முதல்முறை இங்கு இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணிக்கு இந்த தோல்வி பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.

Story first published: Tuesday, February 9, 2021, 13:52 [IST]
Other articles published on Feb 9, 2021
English summary
India lost to England in the first in Chennai match in 227 runs difference. India loses in Chennai in 22 years.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+