2021 ஆசியா கோப்பையிலுருந்து விலக முடிவு.. இந்திய அணி திடீர் திட்டம்.. யாருக்கு வைக்கப்பட்ட செக்!?
சென்னை: 2021 ஆசியா கோப்பை போட்டியில் இந்திய அணி விளையாட வேண்டாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஐசிசி நடத்தும் பல்வேறு கோப்பை போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தொடராக பார்க்கப்படுவது ஆசிய கோப்பை போட்டிகள் ஆகும். பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய அணிகள் ஆடும் தொடர் ஆகும் இது.
ஹங்காங் போன்ற அணிகளும் கூட இதில் கலந்து கொள்ளும். ஐசிசி கோப்பை போட்டிகளுக்கு வெளியே பாகிஸ்தான் இந்தியா மோதும் ஒரே தொடர் இது மட்டுமே.

2020
2020ல் கடந்த ஆசிய கோப்பை போட்டி நடக்க வேண்டியது. ஆனால் ஐபிஎல்லை காரணமாக சொல்லி இந்த தொடரை பிசிசிஐ ஒத்தி வைத்தது. ஆனால் இந்த தொடர் நடப்பதற்கு முன் மொத்தமாக கொரோனா வந்து தொடர் 2021க்கு தள்ளி வைக்கப்பட்டது.

பாகிஸ்தான்
கணக்குப்படி பாகிஸ்தான் இந்த ஆசிய கோப்பையை நடத்த வேண்டும். பாதுகாப்பு கருதி அமீரகத்தில் இந்த தொடர் நடக்கும் என்று பாகிஸ்தான் திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறும் திட்டத்தில் இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.

காரணம்
அதன்படி வரும் ஏப்ரல் மாதத்திற்கு பின் இந்த தொடர் நடக்கும் என்கிறார்கள்.டெஸ்ட் உலகக் கோப்பை பைனல் மற்றும் இந்தியாவில் நடக்க உள்ள போட்டிகளை காரணமாக கூறிய இதில் இருந்து வெளியேற இந்தியா திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். பாகிஸ்தான் இந்த தொடரை நடத்துவதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

முடியாது
எங்களுக்கு அடுத்தடுத்து நிறைய தொடர் உள்ளது. ஐபிஎல் போட்டிகள் வேறு உள்ளது. அதேபோல் ஐபிஎல் 2021 போட்டிகள் வேறு உள்ளதால் ஆசிய கோப்பையில் ஆட முடியாது என்று பிசிசிஐ கூறியுள்ளது.

போச்சு
இந்த தொடரில் இருந்து இந்தியா வெளியேறினால் அது ஆசிய கோப்பையை நடத்தும் பாகிஸ்தானுக்கு பெரிய பொருளாதார ரீதியான, விளம்பர ரீதியான இழப்பை கொடுக்கும். இந்தியா அணிதான் பெரிய பிஸ்னஸ் என்பதால் பாகிஸ்தானும், ஆசிய கோப்பையில் ஆடும் மற்ற அணிகளும் மிகப்பெரிய இழப்பைய் சந்திக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications