Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தோனி ஊரில் 3வது ஒருநாள் போட்டி… ஆஸி.யை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?

Recommended Video

Ind vs Aus 3rd odi | 3வது ஒரு நாள் போட்டி : ஆஸி.யை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?- வீடியோ

ராஞ்சி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் வாய்ப்புக்கான முக்கியபோட்டி என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், மூன்றாவது போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது.

உலக கோப்பைக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் கடைசி தொடர் என்பதால் உலக கோப்பை தொடருக்கும் இதே அணியே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இந்திய அணி சரியான பலத்துடன் இருக்கிறதா என பரிசோதித்தும் பார்க்கப்படுகிறது.

அணிக்கு திரும்பியுள்ளார்

அணிக்கு திரும்பியுள்ளார்

போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் அணிக்கு திரும்பியுள்ளார். எனவே, பந்துவீச்சு மேலும் பலம்பெறுகிறது. சமிக்கு பதிலாக அவர் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் பின்னடைவு

பேட்டிங்கில் பின்னடைவு

இந்திய அணியைப் பொறுத்தவரையில், ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு பார்மில் இல்லாததால் பேட்டிங்கில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஆல் ரவுண்டராக விஜய் சங்கர், ஜடேஜா ஆகியோர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

வந்தார் மார்ஷ்

வந்தார் மார்ஷ்

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில், சுழற்பந்து வீச்சில் அருமையாக விளையாடும் மார்ஷ் அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. கேப்டன் பின்ச், மேக்ஸ்வெல் அணியின் தற்போதைய நிலையை உணர்ந்து நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

தோனி சாதனை

தோனி சாதனை

போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளதால் மண்ணின் மைந்தன் தோனி அதிரடியாக ரன்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்களை கடப்பாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, March 8, 2019, 10:00 [IST]
Other articles published on Mar 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+