For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகளிர் டி20... நாளை அதிரடி ஆட்டம்.. இந்தியா - பாக் மோதல்.. பைனல்ஸ் போவோமா?

Recommended Video

இந்தியா பாகிஸ்தான் மகளிர் அணிகள் நாளை மோதல்- வீடியோ

கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்துவரும் மகளிர் டி-20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பைனல் முன்னேறும்.

7வது மகளிர் டி-20 ஆசியக் கோப்பை போட்டிகள் மலேசியாவில் நடக்கின்றன. இதுவரை 4 முறை ஒருதினப் போட்டித் தொடராகவும், தற்போது மூன்றாவது முறை டி-20 போட்டித் தொடராகவும் இது நடக்கிறது.

இதுவரை நடந்த 6 ஆசியக் கோப்பை போட்டியிலும் இந்தியாவே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த முறை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவை தலா 4 ஆட்டங்களில் மூன்றில் வென்று 6 புள்ளிகளுடன் உள்ளன. இதில் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியா-பாக் மோதல்

இந்தியா-பாக் மோதல்

இந்த ஆசியக் கோப்பையில் நாளை நடக்கும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி, பைனல் முன்னேறும். அதனால் இந்த ஆட்டம் கிட்டத்தட்ட அரை இறுதி ஆட்டமாகவே அமைந்துள்ளது.

அதிர்ஷ்டம் அடிக்குமா

அதிர்ஷ்டம் அடிக்குமா

மற்றொரு லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் வங்கதேசம் விளையாடுகிறது. இதில் மலேசியா வென்றால், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் தோல்வியடையும் அணிக்கு பைனல் முன்னேறும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும்.

வங்கதேசம் முன்னேறும்

வங்கதேசம் முன்னேறும்

ஆனால், வங்கதேசம் தற்போதுள்ள பார்மில் அதற்கு சாத்தியம் இல்லை. அதனால், வங்கதேசம் பைனல் முன்னேறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வங்கதேசம் 6 புள்ளிகளுடன் உள்ளது. மலேசியா இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட வெற்றிப் பெறவில்லை.

7வது முறை கோப்பை

7வது முறை கோப்பை

7வது முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் இந்திய மகளிர் அணி உள்ளது. கடந்த இரண்டு முறையும் பைனல் வரை முன்னேறிய பாகிஸ்தான், இந்த முறையும் பைனல் நுழைய முயற்சிக்கும். அதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நாளைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமானதாகும்.

Story first published: Friday, June 8, 2018, 14:26 [IST]
Other articles published on Jun 8, 2018
English summary
India and pakistan to clash for the final berth in the women t-20 asia cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X