5 மணிக்கு.. "ஹாட் ஸ்டார்" லைவ்.. "சார்ட்டர் ஃபிளைட்" ரெடி - நள்ளிரவில் கிளம்பும் இந்திய அணி
மும்பை: இதோ.. இந்திய அணி இங்கிலாந்து கிளம்பப் போகிறது. நள்ளிரவு பயணம் செய்ய சார்ட்டர் விமானமும் தயார் நிலையில் உள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. அதேசமயம், பெண்கள் அணியும் அங்கு ஒரு டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து செல்கிறது. இந்நிலையில், ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் இன்று (ஜூன்.2) மும்பையில் இருந்து இன்று இங்கிலாந்து கிளம்புகின்றன.

இங்கிலாந்து பயணம்
Bio-safety நெறிமுறைகளின்படி, இங்கிலாந்து அரசு மற்றும் பொது சுகாதார இங்கிலாந்து தேவைகளுக்கு ஏற்ப, இந்திய அணி, சார்ட்டர் விமானத்தில் இங்கிலாந்து செல்கிறது. அப்போது, பி.சி.ஆர் சோதனை நெகட்டிவ் ரிசல்ட்டை வீரர்கள் கொண்டு வர வேண்டும். இங்கிலாந்து வருவதற்கு முன்னர், இந்திய அணி மும்பையில் 14 நாட்கள் பயோ-பபுளில் இருந்தது. அப்போது வழக்கமான சோதனைகள் எடுக்கப்பட்டிருக்கும். இங்கிலாந்து வந்ததும் அவர்கள் நேரடியாக ஹாம்ப்ஷயர் Bowl-ல் உள்ள ஹோட்டலுக்குச் செல்வார்கள், அங்கு அவர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கடுமையான பயோ-பபுள்
இங்கிலாந்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் போது, வழக்கமான சோதனைகள் நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததென்றால், படிப்படியாக வீரர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கப்படும். முதலில் சிறிய சிறிய குழுக்களாக உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பிறகு குழுவின் அளவு அதிகரிக்கப்படும். எனினும், கடுமையான பயோ-பபுள் விதிமுறை பின்பற்றப்படும்.

குடும்பத்தினருடன் செல்ல
அதேசமயம், இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி குடும்பத்தினருக்கும் இங்கிலாந்து வர ஒருவழியாக அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. இதனால், வீரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஏனெனில், மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி, இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு தங்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிரஸ் மீட்
இந்த சூழலில், இன்று(ஜூன் 2) மாலை 5 மணிக்கு இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் கோச் ரவி சாஸ்திரி ஆகியோர் ஹாட் ஸ்டார் மூலம் நடைபெறும் பிரஸ் மீட்டிங்கில் கலந்து கொள்கின்றனர். மும்பையில் 14 நாட்கள் கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்த பிறகு, இன்று நள்ளிரவு இந்திய அணி இங்கிலாந்து கிளம்பிச் செல்கிறது. அதற்கு முன், மாலையில் இருவர் ஹாட் ஸ்டார் வாயிலாக நேரடியாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.


Click it and Unblock the Notifications