Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 2 ரன்கள்.. !! கவனித்தீர்களா..? உலக கோப்பையில் அரிய சாதனையை மிஸ் செய்த இந்தியா…!!

Recommended Video

World Cup 2019-கோஷம் போட்ட ரசிகர்கள் ... ஸ்டீவ் ஸ்மித்துக்கு கை கொடுத்த விராட் கோலி

லண்டன்:உலக கோப்பையில் வெறும் 2 ரன்களில் ஒரு அரிய சாதனையை இந்திய அணி நழுவ விட்டிருக்கிறது.

அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாத போட்டியாக மாறிவிட்டது ஓவலில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உலக கோப்பை ஒருநாள் போட்டி. கிட்டத்தட்ட 352 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்து, ஆஸி.யை கதி கலங்க வைத்துள்ளது இந்தியா.

வலிமையான பேட்டிங் வரிசை என்ன என்பதை இந்த போட்டியில் இந்தியாவிடம் இருந்து ஆஸி. கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். ஹிட் மேன் ரோகித் சர்மா தான் சாதனையை தொடக்கி வைத்தார். தொடக்க ஜோடி, தவான், ரோகித் ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின் அதிரடியாக விளையாட தொடங்கினர்.

அதிரடி அரைசதம்

அதிரடி அரைசதம்

இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தனர். ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கோலி பொறுப்புடன் விளையாட, மறுமுனையில் தவான் தனது 17வது சதத்தைப் பதிவு செய்து 117 ரன்களில் வெளியேறினார்.

352 என்ற இமாலய ஸ்கோர்

352 என்ற இமாலய ஸ்கோர்

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் என்ற மலைக்க வைக்கும் ஸ்கோரை குவித்தது. போட்டியில் ரோகித் 20 ரன்களைக் கடந்த போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2000 ரன்களை குவித்த 4வது வீரர் என்ற பெருமையை எட்டினார்.

ரோகித்தின் சாதனை

ரோகித்தின் சாதனை

குறைந்த போட்டிகளில்(அதாவது37 போட்டிகள்) ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார். முன்னதாக, சச்சின் 40 போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.

அதிரடி பாண்டியா

அதிரடி பாண்டியா

அவரை தொடர்ந்து களத்தில் நங்கூரமாக நின்ற தவான், ஆஸி. பந்துகளை தாளித்து 117 ரன்கள் எடுத்து கலக்கினார். பின்னர் கோலி அரைசதம் கடந்து 82 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியா, ஆஸி.யை கதி கலங்க வைத்துவிட்டார். முடிவில் இந்திய அணி குவித்தது 352 ரன்கள்.

மிஸ்சிங்

மிஸ்சிங்

ஸ்கோர் போர்டை பார்த்தால் முதல் 4 வீரர்கள் எடுத்த ரன்கள் பிரமிப்பாக காட்சியளிக்கின்றன. அதில் ஒரு சாதனையை இந்தியா மிஸ் செய்திருக்கிறது. அதாவது... இதுவரை எந்த உலகக் கோப்பை போட்டியிலும், எந்த அணியின் முதல் 4 வீரர்களும் அரைசதம் என்ற ஸ்கோரை கடந்தது கிடையாது.

அந்த 2 ரன்கள்

அந்த 2 ரன்கள்

இன்று, இந்திய வீரர்கள் ரோகித், கோலி அரைசதம் கடக்க, தவான் சதமடித்தார். 4-வது வீரராகக் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் மட்டும் அந்த 2 ரன்களை ஏதோ ஒரு வகையில் அடித்திருந்தால், இந்தியா அந்தச் சாதனையைப் படைத்திருக்கும். நூலிழையில், இந்திய அணி அந்த அரிய சாதனையை கை நழுவ விட்டிருக்கிறது. இன்னும் உலக கோப்பை தொடரில் போட்டிகள் லைன் கட்டி நிற்பதால் இந்த சாதனையை இந்தியா படைக்கும் என்று நம்புவோமா....!!

Story first published: Sunday, June 9, 2019, 21:29 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+