Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'சாம்பியன் பவுலர்' அஸ்வின் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவு: டிவில்லியர்ஸ் சொல்கிறார்

மும்பை: சாம்பியன் பந்து வீச்சாளர் அஸ்வினை இழந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்கா-இந்திய அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

மூன்று பேர் சதம்

மூன்று பேர் சதம்

தென் ஆப்பிரிக்காவின், டிகாக் (109), பாப் டுப்ளசிஸ் (133), டிவில்லியர்ஸ் (119) ஆகிய மூன்று பேட்ஸ்மேன்கள் சதம் விளாசினர். இதன்மூலம், இந்தியாவில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித்தொடர் ஒன்றை தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

அஸ்வின் இழப்பு

அஸ்வின் இழப்பு

வெற்றிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது: அஸ்வின் ஒரு சாம்பியன் பவுலர். ஆனால் இந்தியா அவரை, இத்தொடரின் இறுதி கட்டங்களில் (காயத்தால்) மிஸ் செய்துவிட்டது. ஆனால், விளையாட்டில் காயம் ஏற்படுவது வழக்கமானதுதான். தென் ஆப்பிரிக்காவிலும், மோர்னே மோர்க்கல் காயத்தால், ஆட முடியாமல் போனது.

டுப்ளசிஸ் சிறப்பு

டுப்ளசிஸ் சிறப்பு

டுப்ளரிசிஸ் ஆட்டம் மிக சிறப்பானது. அவரது சதங்களில் இதுதான் சிறந்தது என்று கூறுவேன். டுப்ளசிஸ் பேட் செய்ய வரும்போது, இந்திய ஸ்பின்னர்கள் நல்ல சுழற்சியுடன் பந்தை வீசிக்கொண்டிருந்தனர். இருப்பினும் தாக்குப்பிடித்து ஆடி சதம் விளாசினார்.

டிகாக் ரசிகன்

டிகாக் ரசிகன்

டிகாக் உள்ளூர் போட்டிகளில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பிடித்த சில காலங்களிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நான் டிகாக்கின் ரசிகனாகிவிட்டேன். இளைஞரான அவர் நாளுக்கு நாள் கற்றுக்கொண்டுள்ளார்.

ரபடா படபடா

ரபடா படபடா

பந்து வீச்சாளர் ரபடா தன்னை மேம்படுத்திக்கொண்டே உள்ளார். தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக அவர் உருவாகிக்கொண்டுள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்வது மிகவும் கஷ்டமான விஷயம். அந்த வகையில் இந்த சுற்றுப் பயணம் சிறப்பானதாகும். இவ்வாறு டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

Story first published: Monday, October 26, 2015, 10:47 [IST]
Other articles published on Oct 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+