Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஹா! இந்திய அணியின் பீல்டிங் “ரொம்ப பிரமாதம்”! ரெண்டு கேட்ச், ஒரு ரன் அவுட் தான் மிஸ் ஆச்சு!!

Recommended Video

இந்திய அணியின் பீல்டிங் தான், தோல்விக்கு முக்கிய காரணமா?- வீடியோ

பிரிஸ்பேன் : இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

இதற்கு இந்திய அணியில் நேற்று செய்த பீல்டிங் சொதப்பலும் முக்கிய காரணம். இதில், கேப்டன் கோலி உட்பட மூன்று வீரர்கள் பீல்டிங்கில் பெரிய தவறுகள் செய்து வெறுப்பேற்றினர்.

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்தது. மழையால் போட்டி தடைபட்டதால் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 169 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கேப்டன் கோலி விட்ட கேட்ச்

கேப்டன் கோலி விட்ட கேட்ச்

இந்திய அணிக்கு நேற்று பெரும் பின்னடைவாக அமைந்தது பீல்டிங். கேப்டன் கோலி எப்போதுமே பீல்டிங்கில் கில்லி மாதிரி இருப்பார். ஆனால், அவரே நெற்றி பல தவறுகளை செய்தார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் 6 ரன்கள் அடித்து இருந்த போது கொடுத்த எளிதான கேட்சை கோலி கோட்டை விட்டார். அதன் பின் பின்ச் 27 ரன்கள் வரை அடித்தார்.

ராகுலால் பறிபோன ரன் அவுட்

ராகுலால் பறிபோன ரன் அவுட்

அடுத்து 13 வது ஓவரில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடித்த பந்து ராகுல் வசம் சென்றது. ராகுல் துரிதமாக பந்தை எடுத்து வீசி இருந்தால் ரன் அவுட் ஆகி இருக்கும். அப்போது ராகுல் தடுமாறியதால் 9 ரன்களில் ஆடி வந்த மாக்ஸ்வெல்லை ரன் அவுட் ஆக்க கிடைத்த நல்ல வாய்ப்பு பறி போனது. அடித்த ஓவரில் மாக்ஸ்வெல் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்ததோடு, 24 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார்.

கலீல் கோட்டை விட்ட கேட்ச்

கலீல் கோட்டை விட்ட கேட்ச்

அடுத்து கலீல் அஹ்மது 16.1 ஓவரில் ஸ்டோய்னிஸ் கொடுத்த கேட்சை சரியாக பிடிக்காமல் விட்டார். இந்த பந்தோடு மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. அடுத்து ஓவர்கள் குறைக்கப்பட்டு, இந்திய அணியின் இலக்கு டிஎல்எஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது.

இது பெரிய தவறு

இது பெரிய தவறு

ஒருவேளை, இந்த விக்கெட் விழுந்து இருந்தால், இந்திய அணியின் இலக்கு சற்று குறைந்து இருக்கும். இந்தியா வெறும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், இது இந்த போட்டியின் மிகப்பெரிய தவறு.

Story first published: Thursday, November 22, 2018, 12:52 [IST]
Other articles published on Nov 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+