Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையில் இந்திய அணி இவரை கட்டாயம் மிஸ் பண்ணும்..! தாதா... நீங்க யாரச் சொல்றீங்க?

மும்பை:உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இளம் வீரர் ரிஷப் பன்ட்டை இந்திய அணி மிஸ் செய்யும் என்று தாதா கங்குலி கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் இந்த முறை சிறப்பாக ஆடியது டெல்லி கேப்பிடல்ஸ். அதன் ஆலோசகராக இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி. அவரது வழிகாட்டுதலில் அணி சிறப்பாக செயல்பட்ட அதே நேரத்தில், டெல்லி அணியில் விளையாடிவரும் ரிஷப் பன்ட், முக்கிய போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

 India misses rishabh pant in icc world cup says former captain ganguly

அவர், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகவில்லை. இது குறித்து பலமுறை கங்குலி கருத்து தெரிவித்து இருந்தாலும், தற்போது மீண்டும் இது பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

வரவிருக்கும் உலக கோப்பை தொடரில், இந்தியா ரிஷப் பன்ட்டை மிஸ் செய்யும். எந்த இடத்தில் என்று என்னால் கூற முடியவில்லை. ஆனால், அவரை இந்தியா மிஸ் செய்யும். அது உறுதி.

ஐபிஎல் தொடரில், டெல்லி சிறப்பாக விளையாடியது. இருப்பினும் தோற்று விட்டது. சிறந்த இரு கேப்டன்கள் இறுதிப் போட்டியில் சந்தித்தனர். அதில் ஒருவர் வெற்றி பெற்றார். சென்னை, மும்பை அணிகள் சிறப்பான அணிகள் என்றார்.

Story first published: Tuesday, May 14, 2019, 15:57 [IST]
Other articles published on May 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+