அடுத்தடுத்து 3 முறை.. முக்கிய கட்டத்தில் இப்படி செய்யலாமா.. ஆஸி. க்கு எதிராக ஷாக் தந்த இந்திய அணி!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் பீல்டிங் இன்று மிகவும் மோசமாக இருந்தது. முக்கியமாக இந்திய அணி 3 முறை விக்கெட் எடுக்கும் வாய்ப்பை நழுவவிட்டது.
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான 3வது டெஸ்ட் தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்கத்திலேயே வார்னர் விக்கெட்டை எடுத்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் போக போக வில் புக்கோவஸ்கி - மார்னஸ் அதிரடியாக ஆடி வருகிறார்கள்.

புக்கோவஸ்கி
அதிலும் அறிமுக வீரர் புக்கோவஸ்கி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். தலையில் அடிபட்டு இவர் கடந்த 2 போட்டிகளாக ஆடவில்லை. இந்த நிலையில் முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து புக்கோவஸ்கி அசத்தி உள்ளார்.

விக்கெட்
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் பீல்டிங் இன்று மிகவும் மோசமாக இருந்தது. முக்கியமாக இந்திய அணி 3 முறை விக்கெட் எடுக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. இரண்டு முறை புக்கோவஸ்கி விக்கெட்டை இந்தியா நழுவவிட்டது.

பண்ட்
இரண்டு முறையும் பண்ட் செய்த மோசமான கீப்பிங் காரணமாக புக்கோவஸ்கி விக்கெட் தவறவிடப்பட்டது. அதிலும் அஸ்வின் ஓவரில் புக்கோவஸ்கி கேட்சை அஸ்வின் தவறவிட்டது பெரிய அளவில் அதிர்ச்சி அளித்தது. இன்னொரு பக்கம் மார்னஸை ரன் அவுட் செய்ய பும்ரா தவறவிட்டார்.

பும்ரா
பும்ரா வழுக்கி விழுந்ததில், மார்னஸ் ரன் அவுட்டை இந்திய அணி தவறவிட்டது. எளிதாக எடுக்க வேண்டிய விக்கெட்டுகளை இந்திய அணி தவறவிட்டுள்ளது. கடந்த போட்டியில் பீல்டிங் சிறப்பாக இருந்ததால் இந்திய அணி வென்றது. இந்த போட்டியில் பீல்டிங் சொதப்ப தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications