For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி டெஸ்ட் தரவரிசை... 2வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்... முதலிடத்திற்கு தாவ திட்டம்!

பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி கொண்டுள்ளது.

இதையடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக வெற்றி கொள்ளும் நிலையில், முதலிடத்தையும் இந்திய அணி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தொடரை கைப்பற்றிய இந்தியா

தொடரை கைப்பற்றிய இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதேபோல ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலிலும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

3வது இடத்தில் ஆஸ்திரேலியா

3வது இடத்தில் ஆஸ்திரேலியா

இந்த பட்டியலில் அடுத்தடுத்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வெற்றி கொண்ட நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இன்றைய தோல்வி மூலம் ஆஸ்திரேலியா 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் ரேட்டிங்கில் வித்தியாசம் காணப்படவில்லை.

முதலிரண்டு இடங்கள்

முதலிரண்டு இடங்கள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ரேட்டிங்கில் 118 புள்ளிகளுடன் சமநிலையில் காணப்படுகின்றன. ஆனால் போட்டிகளில் இரு அணிகளுக்கும் வித்தியாசம் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா அணி 113 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் வரும் 5ம் தேதி முதல் இந்தியா அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது.

சென்னையில் நடைபெறுகிறது

சென்னையில் நடைபெறுகிறது

சென்னையில் நடைபெறவுள்ள இந்த அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து -இந்திய அணிகள் மோதவுள்ளன. சென்னையில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அதில் முழுமையான வெற்றியை பெறும்பட்சத்தில் இந்தியா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறும்.

Story first published: Tuesday, January 19, 2021, 18:01 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
If India beats England in February, then India will be going to Top
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+