Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜிம்பாப்பேவுக்கு நாம "வெள்ளை" அடிச்சே ஆகனும் சார்.. இல்லாட்டி கஷ்டம்!

துபாய்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கி் வென்றாக வேண்டும். அப்போதுதான் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி 2வது இடத்தில் தொடர முடியும்.

இந்தியா, ஜிம்பாப்வே இடையிலான ஒரு நாள் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இரு அணிகளும் மொத்தம் 3 போட்டிகளில் மோதவுள்ளன.

இந்தப் போட்டித் தொடர் இந்தியாவுக்கு முக்கியமானது. காரணம், அதன் 2வது இடம் நீடிப்பதும், நீடிக்காமல் பின் தள்ளிப் போவதும் இந்தத் தொடரை அது வெல்வதில் அடங்கியுள்ளது.

2வது இடத்தில் இருக்கும் இந்தியா

2வது இடத்தில் இருக்கும் இந்தியா

இந்தியா தற்போது ஒரு நாள் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கிறது. 115 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

11வது இடத்தில் ஜிம்பாப்வே

11வது இடத்தில் ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே அணி 11வது இடத்தில், 44 புள்ளிகளுடன் உள்ளது. இந்தத் தொடரில் இந்தியாவின் கையே ஓங்கியிருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

3-0 என்ற கணக்கில்

3-0 என்ற கணக்கில்

இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா ஆணித்தரமாக வென்றாக வேண்டும். அப்போதுதான் 2வது இடத்தில் இந்தியா தொடர முடியும்.

2-1 என்று வென்றால்

2-1 என்று வென்றால்

மாறாக 2-1 என்ற கணக்கில இந்தியா வென்றால் 2 புள்ளிகள் குறைந்து 2வது இடத்தில் இந்தியா நீடிக்கும்.

1-2 என்ற கணக்கில இழந்தால்

1-2 என்ற கணக்கில இழந்தால்

மாறாக 1 போட்டியில் மட்டுமே வென்று தொடரை இழந்தால் இந்தியா 4 புள்ளிகள் குறைந்து 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விடும்.

3-0 என்ற கண்கில் ஜிம்பாப்வே வென்றால்

3-0 என்ற கண்கில் ஜிம்பாப்வே வென்றால்

ஒரு வேளை இந்தியாவை, ஜிம்பாப்வே வெள்ளை அடித்து 3-0 என்ற கணக்கில் வென்று வடிட்டால், அவர்கள் 10வது இடத்திற்கு முன்னேறுவார்கள். இந்தியா 5வது இடத்திற்குத் தள்ளப்படும்.

இப்போதைக்கு ஆஸ்திரேலியா நம்பர் ஒன்

இப்போதைக்கு ஆஸ்திரேலியா நம்பர் ஒன்

தற்போது ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணி 129 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

Story first published: Thursday, July 9, 2015, 12:17 [IST]
Other articles published on Jul 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+