Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள் போட்டி.. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களைக் குவித்தது ஆஸ்திரேலியா

ஜெய்ப்பூர்: 2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்து 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களைக் குவித்துள்ளது ஆஸ்திரேலியா.

ஜெய்ப்பூர்: இந்தியாவுக்கு எதிராக ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடி வருகிறது. 27 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களைக் குவித்திருக்கிறது,.

ஜெய்ப்பூரில் இந்தப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் பிஞ்ச் மற்றும் கியூக்ஸ் அதிரடியாக ரன்களைக் குவித்தனர். 15.2வது ஓவரில் அந்த அணி 74 ரன்களை எட்டிய போது பிஞ்ச் அவுட் ஆனார்.

பின்னர் ஹியூக்ஸுடன் கை கோர்த்தார் வாட்சன். இருவரும் தொடர்ந்து நிலைத்து ஆடினர். 31.6வது ஓவரில் 182 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்த நிலையில் வாட்சன் அவுட் ஆனார். பின்னர் ஹியூக்ஸ் 103 ரன்களில் அவுட் ஆனார். 50 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களைக் குவித்தது.

இதற்கு முன்பு 18 போட்டிகள்..

இதற்கு முன்பு 18 போட்டிகள்..

ஜெய்ப்பூர் மைதானத்தில் இதற்கு முன்பு 18 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணி 7 முறையும், 2-வது பேட் செய்த அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

7 வெற்றி, 4 தோல்வி

7 வெற்றி, 4 தோல்வி

இந்திய அணி இங்கு விளையாடியுள்ள 11 ஆட்டத்தில் 7-ல் வெற்றியும், 4-ல் தோல்வியையும் சந்தித்துள்ளது.

ஆஸிக்கு 2 தோல்வி

ஆஸிக்கு 2 தோல்வி

ஆஸ்திரேலிய அணி இங்கு 3 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

ஒருமுறை இந்தியா-ஆஸி. மோதல்

ஒருமுறை இந்தியா-ஆஸி. மோதல்

இந்த மைதானத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரே முறை 1986-ம் ஆண்டு மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. அதன் பின்னர் தற்போது மீண்டும் மோதியுள்ளன.

ஒருமுறை இந்தியா-ஆஸி. மோதல்

ஒருமுறை இந்தியா-ஆஸி. மோதல்

இந்த மைதானத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரே முறை 1986-ம் ஆண்டு மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

183 ரன்கள் குவித்த டோணி

183 ரன்கள் குவித்த டோணி

இங்கு தான் 2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டோனி 183 ரன்கள் குவித்து மிரள வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 16, 2013, 17:14 [IST]
Other articles published on Oct 16, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+