For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னது நான் பாஜக காரனா? பாரத் என பெயர் மாற்ற சொன்னது தப்பா..பொங்கி எழுந்த சேவாக்

இந்தியாவை பாரத் என பெயர் மாற்றுங்கள் என வீரேந்தர் சேவாக் கூறி தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கிருக்கிறார். மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரத் என பெயர் வையுங்கள் என்றும் அவர் கூறியிருந்தது,பெரும் விவாத பொருளாகி இருக்கிறது.

இதனால் ஷேவாக்கை பலரும் போட்டு பொளந்து வருகிறார்கள். அப்போது இவ்வளவு நாள் இந்தியா என்ற பெயரில் விளையாடியது உங்களுக்கு பெருமையாக இல்லையா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் சேவாக் குறிப்பிட்ட கட்சிக்காரர் என்பதால் இவ்வாறு பேசுகிறார் என்றும் தெரிவித்தனர்.

India name change controversy - Virendar sehwag explaination about his political views

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஷேவாக் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு இருக்கிறார்.அது என்னுடைய தேசம் பாரத் என்று அழைக்க வேண்டும் என நான் விரும்புவதை ஒரு அரசியல் கட்சியோடு பார்க்கப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. நான் எந்த கட்சிக்காரர்களுக்கும் ரசிகன் கிடையாது. தேசிய அளவில் உள்ள இரண்டு கட்சிகளிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.

இரண்டு கட்சியிலுமே கையில் ஆகாத நபர்களும் இருக்கிறார்கள். நான் மீண்டும் கூறுகிறேன் எனக்கு எந்த அரசியல் கட்சியின் மீதும் ஆர்வமோ விருப்பமோ லாபமோ நான் எதிர்பார்த்தது கிடையாது. அப்படி எனக்கு ஏதேனும் இருந்திருந்தால் இரண்டு கட்சியிலும் கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அழைத்த போது சென்றிருப்பேன். என்னுடைய விளையாட்டில் நான் சாதித்ததே அரசியல் கட்சியில் இடம் பிடிக்க போதுமானதாக இருந்திருக்கும்.

என்னுடைய இதயத்தில் இருந்து நான் பேசும் கருத்து என்பது வேறு அரசியல் நிலைபாடு என்பது வேறு. என்னுடைய விருப்பமெல்லாம் பாரத் என பெயரை வைப்பது தான். அதேபோல் எதிர்க்கட்சிகள் தற்போது தங்களுடைய பெயரை இந்தியா என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் தங்களது பெயரை பாரத் என்று கூட மாற்றிக் கொள்ளலாம். பாரத் என்ற பெயருக்கு என்ன விளக்கம் கொடுக்கலாம் என்பதை யோசிக்க தகுதியான திறமையான நபர்கள் இருக்கிறார்கள்.அவ்வளவு ஏன் காங்கிரஸ் கட்சி பாரத் ஜோட யாத்ரா என்ற பெயரில் தான் நாடு முழுவதும் சென்று வந்தார்கள். இப்படி இருக்க ஏன் பலரும் பாரத் என்ற பெயரை நினைத்து பயப்படுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பெயர் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்று தான் மக்கள் பார்ப்பார்கள். யார் சிறப்பாக இருக்கிறார்களோ அவர்கள் வெல்லட்டும் எனக்கு பாரத் என்று நமது நாட்டின் பெயரை அழைத்தால் அது மனநிம்மதியும் மன நிறைவையும் கொடுக்கும் அவ்வளவுதான் எனது ஆசை என்று ஷேவாக் விளக்கம் அளித்துள்ளார்.

Story first published: Wednesday, September 6, 2023, 17:31 [IST]
Other articles published on Sep 6, 2023
English summary
India name change controversy - Virendar sehwag explaination about his political views என்னது நான் பாஜக காரனா? பாரத் என பெயர் மாற்ற சொன்னது தப்பா..பொங்கி எழுந்த சேவாக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+