For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, கோலி, கங்குலியை விட ஒரு சிறந்த இந்திய கேப்டன் இருக்கிறார்.. வெளிநாடுகளில் பல சம்பவம் செய்தவர்

மும்பை : அஜித் வடேகர் ( Ajit Wadekar ) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்ந்தவர். 1971 ல் மேற்கு இந்திய தீவுகளுக்கு முதல் முதலில் கேப்டனாக வழி நடத்தினார். இந்த சுற்றுப் பயணத்தில் தான் சுனில் கவாஸ்கர் டெஸ்ட்கள் விளையாட துவங்கி சரித்திரம் படைத்தார்.

முதல் டெஸ்டில் மேற்கு இந்திய தீவுகள் அணியை பாலோவ் ஆன் மூலம் திடுக்கிட செய்தார். இரண்டாவது டெஸ்டில் வெற்றி அடைந்து இந்திய அணி சாதனை படைத்தது. 1971 ல் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது, அஜித் வடேகர் தலைமையில்.

India national cricket team legendary captain who is Ajit Wadekar

இங்கும் ஒரு டெஸ்ட் வெற்றி பெற்றது இந்திய அணி. லெக் ஸ்பின் பவுலர் பி எஸ் சந்திரசேகர் தன் தனிப்பட்ட பவுலிங் திறமையால் 6 இங்கிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற பெரிதும் உதவினார். அந்த ஆண்டின் இந்த இரண்டு சுற்றுப் பயணங்கள் முடித்து இந்தியா திரும்பிய நமது அணிகள் கோலாகாலமாக வரவேற்கப் பட்டனர்.

ஆட்டக்காரர்கள் பாராட்டை பெற்றனர். குறிப்பாக அஜித் வடேகர் புகழப் பெற்றார், அவரது சிறப்பான கேப்டன் செய்யும் திறமைக்கு. மேற்கு இந்திய தீவுகளில் விளையாடிய 5 டெஸ்டுகளில் ஒன்றில் இந்திய அணி வென்றது. 2 வது டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயின் டிரினிடாட், குயின்' ஸ் பார்க் ஓவல் ( Port of Spain, Trinidad,.Queen's Park Oval ) 7 விக்கெட் வித்தியாசத்தில். மற்ற 4 மேட்சுகளும் டிராவில் முடிந்தன.

India national cricket team legendary captain who is Ajit Wadekar

1971 ஆகஸ்டில் இங்கிலாந்தில் விளையாடிய மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. லண்டன் கென்னிங்டன் ஓவல். ( London Kennington Oval ) 4 விக்கெட் வித்தியாசத்தில். மற்ற இரண்டு டெஸ்டுகளும் டிராவில் முடிவு பெற்றன. 1972-73 ல் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் மேட்சுகள் விளையாடப்பட்டன. முதல் டெஸ்ட் டெல்லியில் இங்கிலாந்து அணி வென்றது.

இரண்டாவது டெஸ்ட் கல்கத்தாவில், மூன்றாவது டெஸ்ட் சென்னையிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. நான்காவது கான்பூர் டெஸ்ட்டும் மும்பையின் 5 வது டெஸ்ட்டும் டிராவில் முடிவடைந்தன. இந்திய அணி அஜித் வடேகர் தலைமையில் 2 - 0 வித்தியாசத்தில் இந்த தொடரையும் வென்று, சாதனை புரிந்தது.

அடுத்ததாக அஜித் வடேகர் தலைமையில் மிக்க எதிர் பார்ப்புகளுடன் 1974 ல் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டது மூன்று டெஸ்டுகள் விளையாட இந்திய அணி விளையாடிய மூன்று டெஸ்டுகளிலும் வெற்றி பெறவில்லை.
முறையே மான்செஸ்டர்,( Manchester) லார்ட்ஸ் ( Lords) பர்மிங்காம். (Birmingham)

குறிப்பாக இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டம் மிக மோசமாக இருந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 1974 ல் இந்த டெஸ்ட் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் விளையாட தேர்வு செய்து ( 20/06/1974 ) விளையாடியது.

ஒப்பனிங் பேட்ஸ்மன் டேன்னிஸ் அமிஸ் ( Dennis Amiss ) 303 பந்துகளை எதிர் கொண்டு 29 பவுண்டரிகள் அடித்து 188 ரன்கள் குவித்தார்.கேப்டன் மைக் டேன்னஸ் ( Mike Dennes ) 220 பந்துகள் விளையாடி 118 ரன்கள் எடுத்தார். இவர் 12 பவுண்டரிகள் அடித்தார். 106 ரன்கள் குவிக்க டோனி க்ரெய்க் ( Tony Greig ) 180 பந்துகள் எடுத்துக் கொண்டார். இவர் 8 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடித்தார்.

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 629.இந்திய அணியின் பிக்ஷன் சிங்க் பேடி 226 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அபித் அலியும், பிரசன்னாவும் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். பேட்டிங் ஆட துவங்கிய பொழுது இந்திய அணி முடிவு பற்றி யோசித்து இருக்க மாட்டார்கள்.

துவக்க ஆட்டக்காரர்களாக சுனில் கவாஸ்கரும் ( Sunil Gavaskar ), பரூக் இன்ஜினீயர் ( Farokh Engineer ) இருவரும் களம் இறங்கினர். இருவரும் நன்றாக பேட்டிங் செய்தனர். இன்ஜினீயர் 86 ரன்கள், கவாஸ்கர் 49 ரன்கள், ஜி ஆர் விஸ்வநாத் ( G R Viswanath) 52 ரன்கள், ஏக்நாத் சோல்கர் ( Eknath Solkar ) 43 ரன்கள் எடுத்து இந்திய அணி முதல் இன்னிங்க்ஸை 302 ரன்களோடு முடித்துக் கொண்டது.

இங்கிலாந்து பவுலர்களில் கிறிஸ் ஓல்ட் ( Chris Old ) 4 மற்றும் மைக் ஹென்றிக் ( Mike Hendrick ) 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எதிர் பார்த்தப்படி இங்கிலாந்து அணி கேப்டன், பாலோ ஆன் முறை படி ( follow- on ) இந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸ் ஆட அழைத்தார். இரண்டாவது இன்னிங்ஸ் ஆட துவங்கிய இந்திய அணி வீரர்களால் இங்கிலாந்து அணி வேக பந்தை எதிர் கொள்ள முடியவில்லை.

அவர்கள் அணியில் பிரதானமாக இரண்டு வீரர்கள் விக்கெட்டுகளை அள்ளி சென்றனர். ஜி ஆர்னால்டு ( Geoff Arnold ) மற்றும் கிறிஸ் ஓல்ட் ( Cris Old ) இருவரும் தலா 8 ஓவர்கள் வீசினர். ஆர்னால்டு 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
கிறிஸ் ஓல்ட் ( Chris Old ) 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

மைக் ஹென்றிக் ( Mike Hendrick ) இரண்டு ரன்கள் கொடுத்தார், அவர் வீசிய ஒரு ஓவரில்.
மொத்தம் 17 ஓவர்களில் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் , விளையாட திணறியதால் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர், இந்திய அணி வீரர்கள்.

ஒருவர் பின் ஒருவராக இந்திய ஆட்டக்காரர்கள் அவுட் ஆகி விட்டு பெவிலியனுக்கு திரும்பிய வண்ணம் இருந்தனர். இன்ஜினீரும் , பிக்ஷன் சிங் பேடியும் ரன்கள் எடுக்கவில்லை. எனவே அவர்கள் ஸ்கோர் 0.ஒருவரை தவிர மற்ற வீரர்கள் எடுத்தது ஒற்றை இலக்கு எண் ரன். ஒரே ஒருவர் மட்டும் அவுட் ஆகாமல் நாட் அவுட்டாக இருந்தார்.

அவர் ஒருவர் மட்டும் தான் இரட்டை இலக்கு ரன்கள் எடுத்தார். அவர் தான் ஏக்நாத் சோல்கர். அவர் எடுத்த ரன்கள் 18*இரண்டாவது இன்னிங்ஸ் மொத்த ஸ்கோர் 42 அன்றைய காலகட்டத்தில், இந்திய அணி எடுத்த குறைந்த பட்ச மொத்த ஸ்கோர் இது. இந்த மேட்ச் நான்கு நாட்களுக்குகள் முடிவு பெற்றது. இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 285 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது.

இந்த மேட்சில் உதவி கேப்டன் வெங்கட்ராகவன் விளையாடவில்லை. இந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் பொழுது மன்சூர் அலிகான் பட்டோடியையும் இந்திய அணியில் விளையாடுவதற்காக அழைத்தார் அஜித் வடேகர், அவருடைய அங்கு விளையாடிய அனுபவத்தை கருத்தில் கொண்டு. ஆனால் பட்டோடி மறுத்துவிட்டார்.

அஜித் வடேகர் 1974 இங்கிலாந்து சுற்று பயணம் முடிவில் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றார். 37 டெஸ்டுகளில் 2113 ரன்கள் குவித்தவர் சராசரி 31.07 ரன்கள். ஒரு டெஸ்டில் 99 ரன்களும் , ஒரு டெஸ்டில் சதம் எடுத்தவர். 16 டெஸ்டுகளில் கேப்டனாக இருந்தவர். 46 கேட்சுகள் பிடித்தவர்.1941 ஏப்ரல் 1 அன்று பிறந்த இவர் 2018 ஆகஸ்ட் 15 ல் மறைந்தார். இடது கை பேட்ஸ்மன். சிறந்த ஸ்லிப் பீல்டர் இவர் இந்திய அணிக்காக மனேஜராகவும் திகழ்ந்தவர்.

வாசுதேவன் பெங்களூரு

Story first published: Tuesday, January 9, 2024, 10:52 [IST]
Other articles published on Jan 9, 2024
English summary
India national cricket team legendary captain who is Ajit Wadekar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+