
4வது நாள் ஆட்டம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் துவங்கி 4 நாட்களை கடந்துள்ளது. தனது இரண்டு இன்னிங்ஸ்களை இங்கிலாந்து அணி ஆடி முடித்துள்ளது. இந்தியாவிற்கு இலக்காக 420 ரன்களை கொடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் 578 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில்178 ரன்களையும் எடுத்துள்ளது.

178 ரன்களுக்கு ஆல்-அவுட்
இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் 178 ரன்களில் முடிய ரவி அஸ்வின் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அவர் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தினார். ஷாபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ரோகித் அவுட்
இந்நிலையில் 420 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை இன்று துவங்கியது. இதில் முதலில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கி விளையாடினர். இதில் துவக்க வீரர் ரோகித் சர்மா அவுட் ஆகியுள்ளார்.

39 ரன்கள்... ஒரு விக்கெட்
தொடர்து சுப்மன் கில் மற்றும் சத்தீஸ்வர் புஜாரா ஆகியோர் தலா 15 மற்றும் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் ஆடி வருகின்றனர். மொத்தத்தில் இன்றைய 4வது நாள் ஆட்டத்தை ஒரு விக்கெட் இழப்பிற்கு 39 ரன்களுடன் இந்தியா முடித்துள்ளது.

வெற்றி அல்லது டிரா
நாளைய தினம் தொடர்ந்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை ஆடவுள்ளது. இதில் 381 ரன்களை அடித்து ஆடி வெற்றியை பெறவும் தொடர்ந்து ஆடி ஆட்டத்தை டிரா செய்யவும் இரண்டு வாய்ப்புகள் இந்தியாவிடம் உள்ளது. இதில் எத்தகைய வாய்ப்பை இந்தியா எடுத்துக் கொள்ளும் என்பது நாளைய தினம் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











