
இலங்கையில் தொடங்கிய பயணம்
இந்தியா கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஒரு போட்டி டி20 தொடரை வென்றது. அப்போது இருந்து டி20 தொடர்களை இழக்காமல் பயணித்துக் கொண்டு வருகிறது இந்திய அணி. இலங்கைக்கு அடுத்து ஆஸ்திரேலிய அணியோடு தொடரை 1-1 என சமன் செய்தது.

தொடர் வெற்றிகள்
அதன் பின்னர் இந்திய மண்ணில் நியூசிலாந்து தொடரை 2-1 எனவும், இலங்கை தொடரை 3-0 எனவும் வென்றது. பின்னர் தென்னாபிரிக்காவில் நடந்த தொடரில் 2-1 என வெற்றி பெற்றது.

நிதாஸ் ட்ராபியில் அசத்தல் வெற்றி
அதன் பின்னர் ரோஹித் தலைமையில் நிதாஸ் ட்ராபி டி20 தொடரை வென்றது. அதன் பின்னர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை வென்றது இந்தியா. அதன் பின் சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்ற இந்தியா, தற்போது ஆஸ்திரேலிய டி20 தொடரை சமன் செய்துள்ளது.

இந்த சாதனை பறிபோனது
எனினும், இந்தியா, ஆஸ்திரேலிய டி20 தொடரை சமன் செய்ததன் மூலம் தொடர்ந்து எட்டாவது டி20 தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. ஆஸ்திரேலிய டி20 தொடரின் முதல் போட்டியை 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. அடுத்த போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், கடைசி போட்டியை வென்று தொடரை சமன் செய்தது இந்தியா.