Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் போட்டிகளில் சொதப்பும் இந்தியா... ஆண்டின் இறுதிப்போட்டியில் வெல்லுமா?

டெல்லி : இந்த ஆண்டில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்தியா விளையாடியுள்ளது.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையில் விளையாடியுள்ள இந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா தோற்றுள்ளது.

நேற்றைய பகலிரவு போட்டியிலும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதி டெஸ்ட் போட்டியில் வரும் 26ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதவுள்ளது.

பகலிரவு டெஸ்ட் போட்டி

பகலிரவு டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி கடந்த 17ம் தேதி துவங்கி நேற்றைய தினம் முடிவடைந்துள்ளது. இதில் மிகவும் மோசமான நிலையில் இந்திய அணி தோற்றுள்ளது.

குறைவான போட்டிகளில் பங்கேற்பு

குறைவான போட்டிகளில் பங்கேற்பு

கொரோனா காரணமாக சர்வதேச போட்டிகளில் இந்திய அணி பங்கேற்காமல் கடந்த மார்ச் மாதம் முதல் 8 மாதங்கள் விலகியிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் மோதி வருகிறது.

மூன்றிலும் தோல்வி

மூன்றிலும் தோல்வி

டி20 தொடரை ஆஸ்திரேலியாவிடம் இருந்து வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இதையடுத்து தற்போது டெஸ்ட் தொடர் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை விளையாடியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே தழுவியுள்ளது.

2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி

2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி

இந்த ஆண்டின் துவக்கத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் இரண்டு போட்டிகளையும் இழந்தது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.

26ம் தேதி துவக்கம்

26ம் தேதி துவக்கம்

இதையடுத்து வரும் 26ம் தேதி அந்த அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி ஜெயித்தால் மட்டுமே இந்த ஆண்டில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது ஜெயித்தது என்ற நிலை உருவாகும். மாறாக அதிலும் தோற்றால், டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியிலும் ஜெயிக்கவில்லை என்ற நிலை ஏற்படும்.

Story first published: Sunday, December 20, 2020, 10:51 [IST]
Other articles published on Dec 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+