For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA ODI: இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ராகுல் நியமனம்.. ரிஷப் பண்ட், ருதுராஜ்க்கு வாய்ப்பு

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் நவம்பர் 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கேப்டனாக இருந்த சுப்மன் கில், காயம் காரணமாக ஒரு நாள் தொடரிலும் இடம்பெறவில்லை.

அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார். ராகுல் ஏற்கனவே இந்திய அணியில் பல போட்டிகளில் வழி நடத்தி உள்ள நிலையில் தற்போது மீண்டும் அந்தப் பதவி கிடைத்திருக்கிறது. இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. இதனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரிஷப் பந்த், ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

KL Rahul

அது மட்டுமில்லாமல் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். அதிரடி வீரர் ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று அனுபவ வீரரான ஜடேஜாவும் அணிக்கு திரும்பிருக்கிறார். ஆல்ரவுண்டர்களாக நிதீஷ் குமார் ரெட்டியும், வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகபந்து வீச்சில் ஹர்ஷித்ராணா, பிரசித் கிருஷ்ணா ,ஆர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோன்று கூடுதல் விக்கெட் கீப்பராக துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஒரு நாள் தொடரில் முகமது சமி சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.இதேபோன்று இந்த இந்திய அணியில் வெறும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும்தான் இடம் பிடித்திருக்கிறார்கள். இதனால் கூடுதல் ஒரு வேகப்பந்துவீச்சாளரை சேர்த்திருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இரண்டாவது விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சச் இடம்பெறலாம் என நினைக்கப்பட்ட நிலையில், அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.நட்சத்திர வீரர்களான பும்ரா சிராஜ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் அணியில் திடீரென்று ஜடேஜா உள்ளே வந்திருக்கிறார் அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு இருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான வரும் 30ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி ராஷியில் நடைபெறுகிறது டிசம்பர் மூன்றாம் தேதி ராய்ப்பூரில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

இந்திய ஒருநாள் அணி: ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி, திலக் வர்மா, கேஎல். ராகுல் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), பண்ட் (விக்கெட் கீப்பர்), வாசிங்டன் சுந்தர், ஜடேஜா, குல்தீப், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித், ருதுராஜ், பிரசித், அர்ஷ்தீப், துருவ் ஜூரெல்

Story first published: Sunday, November 23, 2025, 17:46 [IST]
Other articles published on Nov 23, 2025
English summary
India odi squad for south africa series announced- KL Rahul appointed as captain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+