Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்திய அணியில் ஆயுஷ் பதோனி மாற்று வீரராக தேர்வு.. ஆல்ரவுண்டர் இடத்திற்கு தேர்வானது ஏன்?

ராஜ்கோட்: நியூசிலாந்து ஒருநாள் தொடரில், காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஆயுஷ் பதோனி இந்திய அணியில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். ராஜ்கோட்டில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக அவர் இந்திய அணியில் இணைவார்.

26 வயதான வாஷிங்டன் சுந்தர், நியூசிலாந்து இன்னிங்ஸின்போது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. ஐந்து ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்த நிலையில், களத்தில் இருந்து விலகினார். இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற போட்டியில், 8வது இடத்தில் பேட்டிங் செய்து ஆட்டமிழக்காமல் வாசிங்டன் சுந்தர் களத்தில் நின்றார். ஆனால், அவரால் ரன் ஓட முடியவில்லை.

பிசிசிஐ மருத்துவக் குழு சுந்தரின் காயத்திற்கான அடுத்தகட்ட சிகிச்சையைத் தீர்மானிக்க நிபுணர் கருத்தைப் பெறும். 26 வயதான அயுஷ் பதோனி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 27 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 693 ரன்கள் தான் எடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பையில் கூட 1,12,3 ஆகிய ரன்களை தான் அவர் அடித்து இருந்தார்.

எனினும் ஆயுஷ் பதோனி, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், ஒருநாள் கிரிக்கெட்டில் இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடி, சில சுழற்பந்து ஓவர்களை வீசி விக்கெட்டுகளை எடுப்பார் என்பதால், தற்போது அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டி20 போட்டியில் ஆயுஷ் பதோனி, அபாரமாக விளையாடி வருகிறார். 96 டி20 போட்டிகளில் விளையாடி 1766 ரன்கள் சேர்த்தார். இதே போன்று ஐபிஎல் தொடரில் 56 போட்டிகளில் 963 ரன்கள் அடித்துள்ளார்.

அணி விவரம்: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி.

Story first published: Monday, January 12, 2026, 14:58 [IST]
Other articles published on Jan 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+