"இது லிஸ்ட்லயே இல்லையே” வெங்கடேஷ் ஐயர் தவிர்த்து மற்றொரு தமிழக வீரருக்கும் அணியில் இடம் - விவரம்
மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய 50 ஓவர் அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக வரும் ஜனவரி 19ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.
டெஸ்ட் அணியை மட்டும் அறிவித்திருந்த பிசிசிஐ, ஒருநாள் போட்டிகளுக்கான அணியை மட்டும் இன்னும் அறிவிக்காமல் உள்ளது.

இந்திய ஒருநாள் அணி
இந்தியாவின் பிரபல உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்த தொடரை முழுவதுமாக பார்த்த பின்பு ஒருநாள் போட்டிகளுக்கான அணியை அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று அல்லது நாளைக்குள் தேர்வர்கள் குழு கூடி ஒருநாள் அணியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனியர் வீரர்கள்
இந்த முறை சில முக்கிய வீரர்கள் ஒருநாள் அணிக்கு திரும்பவுள்ளனர். ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்குள் வரவுள்ளார். இதே போல யுவேந்திர சாஹலுக்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இவர்களோடு சேர்த்து விஜய் ஹசாரே தொடரில் கலக்கிய இளம் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் அணியில் இடம்பெறவுள்ளதாக கூறப்பட்டது.

அதிர்ச்சி வைத்தியம்
இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் ஒன்று கொடுத்துள்ளனர். அதாவது தமிழக வீரரான ஷாருக்கானின் பெயரையும் பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடர் மற்றும் விஜய் ஹசாரே ஆகிய தொடர்களில் தமிழக அணிக்காக பினிஷர் ரோலில் களமிறங்கி அதிரடி காட்டினார் ஷாருக்கான்.
Recommended Video

ப்ளேயிங் 11ன் வாய்ப்பு
இதன் காரணமாக அவரது பெயரும் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ சார்பில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் இந்திய அணியில் இடம்பெற்றாலும், ப்ளேயிங் 11ல் இடம்பெறுவது சந்தேகமே. ஏனென்றால் அவருக்கு முன்னதாக ஷர்துல் தாக்கூர், வெங்கடேஷ் ஐயர் போன்றோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications