Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு தண்ணி காட்டுமா இந்தியா!

Recommended Video

3 ஆவது போட்டியிலும் இந்தியாவின் வெற்றி தொடருமா?- வீடியோ

கேப்டவுன்: முதல் இரண்டு ஒருதினப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, கேப்டவுனில் 7ம் தேதி நடக்கும் மூன்றாவது போட்டியில் விளையாட உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி தண்ணி காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

India on the top


தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. டர்பன் மற்றும் சென்சூரியனில் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா அபாரமாக வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், மூன்றாவது ஒருதினப் போட்டி 7ம் தேதி கேப்டவுனில் நடக்கிறது. கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கேப்டவுனில், ரேஷன் முறையில்தான் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, மூன்றாவது போட்டியிலும் வென்று, தொடர் வெற்றியை உறுதி செய்வதற்கு இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்திய அணி, அதை தொடருவதற்கும் இந்தப் போட்டியின் வெற்றி முக்கியமாகும். இரு அணிகளும் 120 புள்ளிகளுடன் உள்ளன.

பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே இந்திய அணி வலுவாக உள்ளது. வீரர்கள் காயமடையும் பிரச்னையால் தென்னாப்பிரிக்கா திணறி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் தொடரை வென்றதில்லை என்ற மோசமான சாதனையை முறியடிக்க கோஹ்லி அண்ட் கோவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால், கேப்டவுனிலும் இந்தியாவின் வெற்றி தொடரும் என்று நம்பலாம்.
Story first published: Monday, February 5, 2018, 13:32 [IST]
Other articles published on Feb 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+