Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஜினி போல் புலம்பும் ஆஸ்திரேலியா!

நாக்பூர்: அரசியலில் வெற்றி பெறுவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை என்று ரஜினி கூறியதுபோல, இந்தியாவை எப்படி வெல்வது என்பது தெரியவில்லையே என்று கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி புலம்புகிறது.

5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடர் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி வந்துள்ளது.

ஒருதினப் போட்டித் தொடரில் நாக்பூரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 4-1 என்ற கணக்கில் முடித்தது. பெங்களூருவில் நடந்த, 4வது ஒருதினப் போட்டியில் வென்று, இலங்கையை விட பரவாயில்லை என்று ஆஸ்திரேலியா ஆறுதல் அடைந்துள்ளது.

வயசானாலும்

வயசானாலும்

2019 உலகக் கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதற்கான களமாக இந்தத் தொடர் அமைந்துள்ளது. வயசானாலும் உங்க ஸ்டைலும், திறமையும் குறையவேயில்லை என்று கேப்டன் கூல் டோணிக்கு பிசிசிஐ புகழாரம் சூட்டி வருகிறது.

 புதிய கபில்தேவ்

புதிய கபில்தேவ்

புதிய கபில்தேவாக ஹார்திக் பாண்டயா உருவாகி வருகிறார். ஜஸ்பிரித் பூம்ரா, ஷேன் வார்னே பாராட்டியுள்ள குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் பந்துவீச்சில் கலக்கி வருகின்றனர்.

புதுசா கட்டிக்கிட்ட ஜோடி

புதுசா கட்டிக்கிட்ட ஜோடி

புதுசா கட்டிக்கிட்ட ரோஹித் சர்மா, ரஹானே ஜோடி அபார தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர். கேப்டன் விராட் கோஹ்லிக்கு கை கொடுக்க மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவும் உள்ளனர்.

எல்லாமே இருக்கு

எல்லாமே இருக்கு

ஒரு வெற்றி அணிக்கான அனைத்து அம்சங்களும் இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது பொருந்தியுள்ளது. இலங்கை அணியை 5-0 என்ற வென்றது ஏதோ லக் அல்ல, எங்களுடைய திறமை என்பதை, ஆஸ்திரேலிய தொடரில், இந்திய அணி நிரூபித்துள்ளது.

வா டி 20 ஆடலாம்

வா டி 20 ஆடலாம்

வெற்றி பெறுவதற்கு என்ன வழி என்று கேட்டால், வா டி-20 விளையாடலாம் என்று கோஹ்லி அழைக்கிறார் என்று, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புலம்பி வருகிறார்.

அடுத்த போட்டிகள்

அடுத்த போட்டிகள்

அடுத்ததாக, டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில், வரும் 7ம் தேதி டி-20 போட்டித் தொடர் துவங்குகிறது. 10ம் தேதி குவஹாத்தியிலும், 13ல் ஐதராபாத்திலும் அடுத்த டி-20 போட்டிகள் நடக்கின்றன.

Story first published: Monday, October 2, 2017, 14:50 [IST]
Other articles published on Oct 2, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+