அரை இறுதிக்கு பாகிஸ்தான் வந்தாச்சு… இந்தியாவுக்காக வெயிட்டிங்!
கிறிஸ்ட்சர்ச்: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிக்கு பாகிஸ்தான் முன்னேறியது. வங்கதேசத்துக்கு எதிரான இந்தியாவின் காலிறுதி ஆட்டத்தின் முடிவுக்காக அது காத்திருக்கிறது.
நியூசிலாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.

தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்புக்கு !89 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் 47.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வென்றது. பாகிஸ்தானின் அலி ஜர்யாப் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதியில் இங்கிலாந்து அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவின் லாயிட் போப் 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் மற்றொரு காலிறுதியில் வெற்றி பெறும் அணியுடன், 29ம் தேதி நடக்கும் அரை இறுதியில் ஆஸ்திரேலியா மோதும்.
இரண்டு முறை சாம்பியனான பாகிஸ்தான், 30ம் தேதி நடக்கும் அரை இறுதியில் விளையாட உள்ளது. இந்தியா – வங்கதேசத்துக்கு எதிராக நாளை நடக்கும் காலிறுதி போட்டியின் முடிவுக்காக அது காத்திருக்கிறது.
நெடுஞ்சுவர் ராகுல் திராவிட் பயிற்சி அளிக்கும் இந்திய அணி, நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தயாராக உள்ளது.
சமீபத்தில் நடந்த பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை போட்டி பைனல்சில் பாகிஸ்தான் அணியை வென்று இந்தியா கோப்பையை வென்றது. தற்போது ஜூனியர் உலகக் கோப்பையில், அரை இறுதியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது.
Story first published: Friday, January 26, 2018, 11:14 [IST]
Other articles published on Jan 26, 2018


Click it and Unblock the Notifications