பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் பைனல்.. பாக்.கை சந்திக்கிறது இந்தியா
துபாய்: பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை போட்டியின் பைனலில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்திய அணி.
பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், யு.ஏ.இ.,யில் நடந்து வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான இந்தியா, ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடையாமல் பைனலுக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது. லீக் சுற்றில் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் அணிகளை வென்றது.
நேற்று நடந்த அரை இறுதியில் வங்கதேசம் அணியுடன் மோதியது. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி.
முதலில் ஆடிய வங்கதேசம் 38.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 256 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அப்துல் மாலிக், 108 ரன்கள் குவித்தார். துர்கா ராவ் 3 விக்கெட்களையும், தீபக் மாலிக் பிரகாஷ் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா, 23 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து, 259 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது. கணேஷ்பாய் முதாகர், 69 பந்துகளில், 112 ரன்கள் விளாசினார். ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றார். தீபக் மாலிக், 43 பந்துகளில், 53 ரன்கள் குவித்தார்.
ஷார்ஜாவில் 20ம் தேதி நடக்கும் பைனலில் பாகிஸ்தான் அணியை இந்தியா சந்திக்கிறது. மற்றொரு அரை இறுதியில், 156 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்.
Story first published: Thursday, January 18, 2018, 11:58 [IST]
Other articles published on Jan 18, 2018


Click it and Unblock the Notifications