இந்தியாவுல தேர்தல் வருது.. கிரிக்கெட் ஆட கூப்பிட்டா வரமாட்டாங்களே.. புலம்பும் பாக்.
Recommended Video

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட எஹ்சான் மானி, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய முயன்று வருகிறார்.
அதில் குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தப்படி இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாதது குறித்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முயன்று வருகிறார்.
எனினும், இந்த விவகாரம் ஏற்கனவே பெரிதாகி ஐசிசி விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருப்பது குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் எஹ்சான் மானி.

இருதரப்பு தொடர் இல்லை
இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல் ரீதியாக கடந்த 2013 முதல் பல பிரச்சனைகள் உள்ளன. அதை அடுத்து ஜனவரி 2013க்கு பின்னர் இந்தியா பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதில்லை. எனினும், ஐசிசி நடத்தும் தொடர்களில் 2013இல் இருந்து இது வரை 10 முறை பாகிஸ்தானோடு மோதி உள்ளது.

விளையாட்டு தொடர்புகள்
இது பற்றியும், இந்தியா - பாகிஸ்தான் அரசியல் உறவை மேம்படுத்துவது பற்றியும் பேசிய மானி, "இருநாட்டு உறவுகளை விளையாட்டு தொடர்புகள் மற்றும் கலாசார தொடர்புகள் மூலம் மட்டுமே மேம்படுத்த முடியும். என்னை பொறுத்தவரை அது விளையாட்டில் கிடைக்கும் பணத்தை விட முக்கியமான விஷயம். எனினும், இப்போது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இந்தியா ஐசிசி நடத்தும் போட்டிகளில் எங்களுடன் ஆடுகிறது. ஆனால், இருதரப்பு கிரிக்கெட் ஆட மறுக்கிறது. இதைப் பற்றி நாங்கள் விரைவில் ஒரு முடிவை எட்ட வேண்டும்" என பாகிஸ்தான் தரப்பு நியாயத்தை கூறினார்.

அடுத்த வருஷம் தேர்தல் வருது
இந்தியா இன்னும் கொஞ்சம் இறங்கி வர வேண்டும் என நினைக்கிறீர்களா என கேட்ட கேள்விக்கு இந்திய மக்கள் மற்றும் பாகிஸ்தான் மக்கள் இரு நாடுகளுக்கு இடையே ஆன கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். ஆனால், அதை செயல்படுத்தும் பொறுப்பு அரசியல்வாதிகளிடம் தான் உள்ளது. இந்தியா அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ளது. அப்படி இருக்கும் போது அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இறங்கி வர மாட்டார்கள் என புலம்பினார் மானி.

ஐசிசி-யில் வழக்கு
2015 முதல் 2௦23 ஆண்டுகளுக்குள் ஆறு முறை இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் ஆட இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், அரசியல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் நாட்டுடன் கிரிக்கெட் தொடரில் ஆட மறுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கு ஐசிசி-யில் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications