Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் தொடருக்காக இந்தியாவிடம் மண்டியிட்டு பிச்சை கேட்கவில்லை: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்

இஸ்லாமாபாத்: கிரிக்கெட் தொடர் நடத்துமாறு, இந்தியாவிடம் மண்டியிட்டு பிச்சை கேட்கவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகர்யார் கான் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பரில் இரு நாடுகள் நடுவே போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடருக்கு தடை

தொடருக்கு தடை

தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. வருவாய் இழப்பில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ, இந்தியாவுடன் போட்டித்தொடர் நடந்தால் நல்ல வருவாய் பார்க்கலாம் என்ற ஆவலில் உள்ளது.

அப்ரிடி கோபம்

அப்ரிடி கோபம்

பாகிஸ்தான் வாரிய ஆர்வத்தால் கோபமடைந்த அணி வீரர் அப்ரிடி, இந்திய வாரியத்திடம் கெஞ்ச வேண்டாம் என்று கருத்தை வெளிப்படுத்தினார்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகர்யார் கான் "2015-2023 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் 6 கிரிக்கெட் தொடர்களில் ஆடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. வரும் டிசம்பரில் ஐக்கிய எமிரேட்ஸ் நாட்டில் வைத்து, டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடும் ஒப்பந்தமும் அதில் ஒன்று.

இந்தியா குழப்புகிறது

இந்தியா குழப்புகிறது

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம், பாகிஸ்தான் வாரியம் பலமுறை நினைவுபடுத்தியுள்ளது. ஐசிசி ஆலோசனை கூட்டங்களிலும் பேசியுள்ளோம். ஆனால், இந்திய தரப்பில் உறுதியான பதில் வரவில்லை. அவர்கள் விளையாட்டையும், அரசியலையும் போட்டு குழப்புகிறார்கள்.

பிச்சை கேட்கவில்லை

பிச்சை கேட்கவில்லை

நாங்கள் இந்தியாவிடம் மண்டியிட்டு, பிச்சை கேட்கவில்லை. ஏற்கனவே போட்டுள்ள ஒப்பந்தத்தின் நிலை என்ன? அதை மதிக்கிறீர்களா இல்லையா என்றுதான் இந்திய வாரியத்திடம் கேட்டுவருகிறோம். டிசம்பரில் நடைபெறுவதாக ஒப்பந்தம்போடப்பட்டுள்ள கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு குறைவு. ஏனெனில், இந்திய அரசாங்கம், அந்த நாட்டு வாரியத்துக்கு எந்த ஒரு, ஒப்புதலையும் வழங்கும் வழியை காணோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Story first published: Wednesday, September 23, 2015, 12:37 [IST]
Other articles published on Sep 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+