கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தி இருப்பது ரசிகர்கள் மத்தியில் எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் உலகின் முதல் நிலை அணியாக இந்த தொடரில் விளையாடிய பாகிஸ்தானை எதிர்கொள்வது அவ்வளவு சாதாரண காரியம் கிடையாது என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
மேலும் ஷாகின் ஆப்ரிடி இந்திய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதை கிண்டல் செய்யும் விதமாக They cant play him என்ற ஹேஷ்டாகில் பாகிஸ்தான் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு என்பது பலம் வாய்ந்தது என நினைத்து நமது வீரர்கள் சரியாக விளையாடாமல் பல போட்டிகளில் கோட்டை விட்டார்கள்.

இந்த இமேஜை உடைத்தது கில் தான். அவர் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்கள். இதன் காரணமாக ஷாகின் ஆப்ரிடி நேற்றைய ஆட்டத்தில் 10 ஓவரில் 79 ரன்களை விட்டுக் கொடுத்தார். மேலும் பாகிஸ்தான் அணியின் ஹரிஷ் ரவுப் காயம் காரணமாக இரண்டாவது நாள் விளையாடாமல் போனதும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. மேலும் நேற்றைய ஆட்டத்தில் கே எல் ராகுல் மிகப் பிரமாதமாக விளையாடினார்.
காயத்திலிருந்து திரும்பி வந்துள்ள அவர் தன்னுடைய திறமையை நிரூபித்து அணியில் இடத்தை பிடித்து விட்டார். விராட் கோலியின் ஆட்டத்தை சொல்ல வார்த்தையே இல்லை. அவர் எப்போதும் போலவே நன்றாக விளையாடி இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது நிச்சயம் அனைவருக்கும் பெருமையான விஷயம்தான்.மேலும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது அவர்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கும் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து இதைப்போல் பாசிட்டிவ் ஆக அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வேண்டும் என ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.