For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs PAK: ஆஹா.. சிக்னல கொடுத்துட்டாங்க.. இன்னைக்கும் நடக்காதோ.. கொழும்புவில் கொட்டும் மழை!

கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று மதியம் மீண்டும் தொடரப்பட உள்ள நிலையில், கொழும்புவில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

India Pakistan Match: Heavy Rain in Colombo from early morning ahead of the India vs Pakistan Match on Reserve day

இதன்பின் விராட் கோலி - கேஎல் ராகுல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் அதிகமாக சாரல் மழை பெய்ததால், மைதானம் பாதிக்கப்பட்டது. பின்னர் மைதானத்தை சரி செய்து ஆட்டத்தை தொடங்கலாம் என்று ஆலோசித்த நிலையில் மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் ரிசர்வ் டேவுக்கு மாற்றப்பட்டது.

இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு தொடரப்படவுள்ளது. இந்த நிலையில் கொழும்புவில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. அதிகாலையிலேயே மழை பெய்ய தொடங்கியதால், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனிடையே காலை 9.30 மணியளவில் கொழும்புவில் மழை சற்று குறைந்து வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் கொழும்பு வானிலை ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் மாற்றமடைந்து வருகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் திட்டமிடப்படி தொடங்கினாலும் மீண்டும் மாலையில் மழை பெய்ய 90 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் டே இருந்தாலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்க வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. மாலை மீண்டும் மழை குறுக்கிடும் பட்சத்தில், 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தவும் நடுவர்கள் திட்டமிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Monday, September 11, 2023, 10:38 [IST]
Other articles published on Sep 11, 2023
English summary
India Pakistan Match: Heavy Rain in Colombo from Early Morning and now conditions are getting Brighter. So India vs Pakistan Match is still doubtful on Reserve day in Asia cup 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+