Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட போங்கப்பா! ஈஸியான ரன் அவுட்.. முகமது சிராஜ் செய்த தவறு.. பாகிஸ்தானுக்கு கிடைத்த லக்

அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் முகமது சிராஜ் ஒரு ஈஸியான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முகமது சிராஜ் எட்டு ஓவர் வீசி 50 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்னும் சொல்லப்போனால் முதல் ஓவர்களில் சிராஜின் பந்துவீச்சை பாகிஸ்தான் வீரர்கள் அடித்து விளையாடினார்கள்.

India pakistan match - Mohammed siraj wasted run out chance

அதிலிருந்து மீண்டு வந்து கொஞ்சம் பொறுப்புடன் சிராஜ் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தாலும் பில்டிங்கில் ஒரு மிகப்பெரிய தவறு செய்தார். பாகிஸ்தான் அணி 155 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்த போது களத்திற்கு சவுத் ஷக்கில் வந்தார். திறமையான இளம் வீரராக கருதப்படும் ஷக்கில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர். இந்த நிலையில் முதல் பந்திலே சவுத் சக்கில் ரன் அவுட் ஆக வாய்ப்பு ஏற்பட்டது.

அவர் அருகிலே பந்தை அடித்து விட்டு ரன் ஓடினார்.இந்த பந்தை ஓடிப்போய் உடனே எடுத்த சிராஜ் அதனை ஸ்டெம்பில் அடிக்காமல் தவறவிட்டார். இது மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. சிராஜ் மட்டும் அந்த பந்தை அடித்து இருந்தால் அவர் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் சென்றிருப்பார். எனினும் சவுத் சக்கில் இன்றைய ஆட்டத்தில் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

காரணம் அவர் குல்தீப் பந்தில் 6 ரன்கள் எடுக்கும் போது எல் பி டபிள்யூ ஆனார். இதனால் சிராஜ் செய்த தவறு பெரிய தாக்கத்தை ஏதும் அணியில் ஏற்படுத்தவில்லை. எனினும் ஒரு ரன் கூட இறுதி கட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். மேலும் பில்டிங் சரியாக செய்திருந்தால் அவருடைய தனிப்பட்ட பந்துவீச்சும் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்படும் அவருடைய உத்வேகமும் அதிகரிக்கும்.

Story first published: Saturday, October 14, 2023, 17:28 [IST]
Other articles published on Oct 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+