பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியா.. 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. குல்தீப் அசத்தல் பவுலிங்
கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்று இருக்கிறது.
சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. பாகிஸ்தானை அணி கேப்டன் பாபர் அசாம், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் இந்திய அணி 147 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இனி அடுத்து ரிசர்வ் டேவில் , விடப்பட்ட இடத்திலிருந்து ஆட்டம் தொடங்கியது. இதில் விராட் கோலியும், கே எல் ராகுலும் தங்களுடைய வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடினார்கள். குறிப்பாக காயத்திலிருந்து திரும்பி வந்துள்ள கே.எல். ராகுல் 106 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
மறுமுனையில் இருந்த விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் மூன்று இமாலய சிக்சர்ர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 47வது சதம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13,000 ரன்கள் என பல்வேறு சாதனைகளை விராட் கோலி படைத்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 356 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்தது.
இதனை தொடர்ந்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி தங்களது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பாகிஸ்தானை காட்டிலும் இன்று சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஆகியோர் பாகிஸ்தானை கதறவிட்டனர். இந்திய வேகப்பந்துவீச்சை தொட முடியாமல் இமாமுல் ஹக் 9 ரன்களிலும் பாபர் அசாம் 10 ரன்களிலும் முகமது ரிஸ்வான் இரண்டு ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனை அடுத்து குல்திப் யாதவ் கையில் பந்து சென்றதும், அவர் தன்னுடைய மேஜிக் பந்து வீச்சை வெளிப்படுத்த வீரர்கள் கொஞ்சம் கூட அதனை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 128 ரன்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்தது. பாகிஸ்தான் அணியின் நசீம் ஷா, ஹாரிஸ் ஆகியோர் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் 32 ஓவரில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது. சிறப்பாக பந்து விஷய குல்திப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Click it and Unblock the Notifications