Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷாகின் ஆப்ரிடி மட்டும் ஆபத்து கிடையாது.. உண்மையான ஆபத்தே இவர் தான்.. இந்திய அணியை எச்சரித்த கவாஸ்கர்

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றினார்.இந்த நிலையில் ஷாகின் அப்ரீடியை இந்திய வீரர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதில் தான் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இருக்கிறது.

India Pakistan match - sunil Gavaskar gives warning team india about naseem shah

இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு கவாஸ்கர் ஒரு எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார். அதில் ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களை கவனியுங்கள். நஷிம்சா எப்படி பந்து வீசுகிறார் என்பதை பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அவருடைய அவுட் ஸ்விங்கர் எல்லாம் பிரமிக்கும் வகையில் இருக்கிறது. நஷிம்ஷாவை எதிர்கொள்வது நிச்சயம் கடினமான பணி தான். சாகின் ஆப்ரிடி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டார்.

இதனால் அவர் மீது தான் கவனம் இருக்கும். ஆனால் உண்மையான பிரச்சனையை நசீம் ஷாவிடம் தான் இருக்கிறது. முதல் ஆட்டத்தில் கில் தான் அதிகமாக எதிர்கொண்டார். நஷிம்சாவின் பந்துகளை தொடாமல் கில் சமாளித்தார். இன்றைய ஆட்டத்தில் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஏதேனும் ஒரு வீரர் களத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

கில் தற்போது ரன் அடிக்கும் பார்மில் இல்லை. எனவே ஆங்கர் ரோலை அவர்தான் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது 50 ஓவர் கிரிக்கெட் போட்டி என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் மெதுவாக விளையாடி பிறகு அதிரடியாக ஆடி ரன் சேருங்கள். அதற்கு தேவையான அனைத்து ஷாட்களும் உங்களிடம் இருக்கிறது. முதல் ஆட்டத்தில் நசீம் ஷா, கில் ரன் அடிக்காத வகையில் பார்த்துக்கொண்டார்.

இன்றைய ஆட்டத்திலும் இதே போல் விளையாடுங்கள் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது கொழும்புவில் வெயில் அடித்து வருகிறது. இதனால் இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படாத சூழல் உருவாகின்றது.

Story first published: Sunday, September 10, 2023, 14:05 [IST]
Other articles published on Sep 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+