IND vs PAK இப்போ மழை பெய்தால் யார் வெற்றி பெறுவார்.. டக்வொர்த் லூயிஸ் விதி எப்போது நடைமுறைக்கு வரும்
கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தற்போது டிரைவர் சீட்டில் அமர்ந்து வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மழை காரணமாக நேற்றைய ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இதில் இந்திய அணி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

குறிப்பாக விராட் கோலி, கேஎல் ராகுல் ஜோடி அபாரமாக விளையாடி ரண்குவிப்பில் ஈடுபட்டார்கள். குறிப்பாக பாகிஸ்தான் வேக பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தியது. இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 356 ரன்களுக்கு இரண்டு விக்கெட் எடுத்தது. இதனை அடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி தற்போது விளையாடி வருகிறது.
இந்த நிலையில் மழை தற்போது பெய்தால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். எப்போதுமே டக்வொர்த் லூயிஸ் விதி ஒரு நாள் கிரிக்கெட்டில் 20 ஓவருக்கு பிறகு தான் அமலில் வரும். இதனால் இந்திய அணி விரைவாக இருபது ஓவர்களை வீசி முடித்தால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியா தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேளை 20 ஓவர் முடிவதற்குள்ளேயே மழை கொட்டி தீர்த்து ஆட்டம் அதன் பிறகு நடத்த முடியாமல் போனால், வெற்றி தோல்வியின்றி போட்டி முடிவடைந்து விடும். அதே சமயம் 20 ஓவருக்குள்
20 ஓவர் முடிவில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 107/0, 121/1, 139/2, 160/3, 187/4 என்ற அளவில் உள்ளது. தற்போது 11 ஓவர் முடிவில் பாகிஸ்தான அணி 2விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் தான் எடுத்திருக்கிறது.
தற்போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. போட்டி மீண்டும் தொடங்கி இந்திய அணி விரைவில் 20 ஓவர் முடித்து வெற்றியை பெறுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா விரைவில் பந்து வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 20 ஓவர் மட்டும் இந்தியா தாண்டி விட்டால் இரண்டு புள்ளிகள் நமக்கு நிச்சயம் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், அதற்கு முதலில் மது மனசு வைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications