Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா பாகிஸ்தான் இடையே எவ்வித கிரிக்கெட் போட்டியும் கூடாது.. பயிற்சியாளர் கம்பீர் கருத்து

மும்பை: இந்தியா,பாகிஸ்தான் அணி இனி எந்த வித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க கூடாது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே இரு அணிகளும் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை.வெறும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களின் மட்டும்தான் விளையாடுகிறது. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

இதனால் இந்திய அணி இனி பாகிஸ்தானுடன் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என்று தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், பாகிஸ்தான் தங்களுடைய தவறை நிறுத்தும் வரை இரு நாடுகளுக்கும் இடையே எந்தவித கிரிக்கெட் போட்டியும் நடக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய சொந்த விருப்பம்.

Ind vs Pak

ஆனால் இது எல்லாம் நமது அரசின் முடிவு. நாங்கள் பாகிஸ்தான் உடன் விளையாடுவதாக வேண்டாமா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். கிரிக்கெட் போட்டிகளை விட, பாலிவுட் சினிமாவை விட எனக்கு இந்திய மக்கள் மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தான் மிகவும் முக்கியம். கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்.

சினிமா எப்போதும் எடுக்கப்படும். பாடகர்கள் மேடையில் ஏறி பாடத் தான் செய்வார்கள். ஆனால் இது அனைத்தும் நாம் விரும்பும் ஒருவரின் உயிர் போவதற்கு சமம் ஆகாது. எனினும் இது அனைத்தும் என்னுடைய முடிவு கிடையாது. இது குறித்து நான் எதையும் செய்ய முடியாது. இதை அனைத்திற்கும் பிசிசிஐ தான் முடிவு எடுக்க வேண்டும்.

அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம். அதை வைத்து அரசியல் செய்ய மாட்டோம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடக்கூடாது என்று தற்போது பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் ஆசிய கோப்பை தொடரை நடைபெறாத சூழல் ஏற்பட்டுள்ளது. கம்பீரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Story first published: Tuesday, May 6, 2025, 23:48 [IST]
Other articles published on May 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+