For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள்: ஒரு புள்ளிவிவரப் பார்வை

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 119 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரு நாட்டு அணிகளின் சார்பில் சாதனை படைத்தவர்கள் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் ஒரு பார்வை...

Sachin Tendulkkar

அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர்

இந்தியா- 356-9.

2005 , ஏப்ரல் 5ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

பாகிஸ்தான் - 344-8.

2004 மார்ச் 13ம் தேதி கராச்சியில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

மிகவும் குறைந்த இன்னிங்ஸ் ஸ்கோர்

இந்தியா - 79

சியால்கோட்டில் 1978ம் ஆண்டு, அக்டோபர் 13ம் தேதி நடந்த இப்போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.

பாகிஸ்தான் - 87

ஷார்ஜாவில் 1985ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தானை 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்

பாகிஸ்தான் - 322

மொஹாலியில் 2007ல் நடந்த போட்டியில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.

இந்தியா - 316

1998ம் ஆண்டு டாக்காவில் நடந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதிகபட்ச ரன் எடுத்தோர்

சச்சின் டெண்டுல்கர் - இந்தியா - 2389 ரன்கள்.
இன்சமாம் உல் ஹக் -பாக். - 2403 ரன்கள்.

அதிகபட்ச தனி நபர் ஸ்கோர்

எம்.எஸ்.டோணி - இந்தியா - 148
சயீத் அன்வர் - பாக். - 194.

அதிகபட்ச பார்ட்னர்ஷிப்கள்

இந்தியா - 231 (சச்சின், சித்து)
பாகிஸ்தான்- 230 (சயீத் அன்வர், இஜாஸ் அகமது)

சிறந்த பந்து வீச்சு

இந்தியா - செளரவ் கங்குலி (16 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது)
பாகிஸ்தான் - ஆக்கிப் ஜாவீத் (37 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்)

பெரிய வெற்றி வித்தியாசம்

இந்தியா - 2008ல் டாக்காவில் நடந்த போட்டியில் 140 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
பாகிஸ்தான் - 2005ல்டெல்லியில் 150 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

சிறிய வெற்றி வித்தியாசம்

இந்தியா - 4 ரன் வித்தியாசத்தில் 1978ல் குவெட்டா போட்டியில் வென்றது.
பாகிஸ்தான் - 4 ரன் வித்தியாசத்தில் 1993ல் ஷார்ஜா போட்டியில் வென்றது.

அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள்

இந்தியா - அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத் தலா 54 விக்கெட்கள்.
வாசிம் அக்ரம் - 60 விக்கெட்கள்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011
English summary
India and Pakistan have playyed 119 ODI matches. Here is a vital statistics for both the teams.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+