Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்காதா? அப்படி எந்த அறிகுறியும் தெரியலையே!

Recommended Video

Lok Sabha Election 2019: Gandhinagar: காந்தி நகர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- Oneindia Tamil

துபாய் : 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறாது என்பதற்கு இதுவரை எந்த அறிகுறியும் இல்லை என ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.

ஹர்பஜன் சிங் எதிர்ப்பு

ஹர்பஜன் சிங் எதிர்ப்பு

ஹர்பஜன் சிங் கூட சமீபத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் ஆடக் கூடாது என கூறி இருந்தார். நாடு தான் முதலில் அதன் பின்பு தான் விளையாட்டு என ஒலித்து வரும் குரலை பிரதிபலித்தார் ஹர்பஜன்.

ஐசிசி வருத்தம்

ஐசிசி வருத்தம்

இந்நிலையில், ஐசிசி அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன், "எங்கள் எண்ணங்கள் அந்த மோசமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருக்கிறது. எங்கள் உறுப்பினர்களுடன் அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்" என கூறி புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு தன் வருத்தத்தை பதிவு செய்தார்.

திட்டமிட்டபடி நடக்குமா?

திட்டமிட்டபடி நடக்குமா?

பின்பு, "ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் எதுவும் திட்டமிட்டபடி நடக்காது என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை" என கூறினார். இதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என கூறி இருக்கிறார் ரிச்சர்ட்சன்.

அரசியல் மாற்றம்

அரசியல் மாற்றம்

ஆனால், பிசிசிஐ-யில் இருந்து வரும் தகவல்கள் இப்போதைக்கு இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்க வாய்ப்பில்லை என்பது தான். ஒருவேளை உலகக்கோப்பை தொடங்குவதற்குள் இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல் ரீதியிலான மாற்றம் இருந்தால் ஒழிய கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் மோத வாய்ப்பில்லை.

கார்கில் போர்

கார்கில் போர்

ஆனால், சிலர் 1999 கார்கில் போர் உச்சத்தில் இருந்த போது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பையில் ஆடியதை சுட்டிக் காட்டுகின்றனர். என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

Story first published: Wednesday, February 20, 2019, 14:26 [IST]
Other articles published on Feb 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+