For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னது கோலியின் தாத்தா காந்தியா? இந்தியாவில் கலக்கும் பிரபல யூடியூபர் ஸ்பீட்

மும்பை : ஐசிசி உலக கோப்பையில் இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபரான ஸ்பீட் என்று அழைக்கப்படும் டேரன் ஜாக்சன் தற்போது இந்த போட்டியை பார்ப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார்.

யூட்யூபில் இரண்டு கோடி சப்ஸ்க்ரைபர் வைத்திருக்கும் ஸ்பீட் உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்டவர். ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடுவது பாடல் பாடுவது சினிமா ட்ரைலர்களை ரிவ்யூ செய்வது என பல வீடியோக்களை டேரன் ஜேசன் போட்டு வந்திருக்கிறார்.

India Pakistan world cup match - Youtuber Speed visits India to support virat kohli

இவரை ரசிகர்கள் ஸ்பீடு என்றே அழைப்பார்கள். இந்த நிலையில் கிரிக்கெட் மீது திடீரென்று ஸ்பீடுக்கு காதல் வந்தது. அதுவும் விராட் கோலியின் தீவிர ரசிகராக ஸ்பீட் மாறிவிட்டார். கால்பந்தில் எப்படி கிறிஸ்டியானோ ரொனால்டோ பிரபலமாக இருக்கிறாரோ, அதேபோல் விராட் கோலி கிரிக்கெட்டில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டார்.

அதன் பிறகு கிரிக்கெட் குறித்து பல விஷயங்களை கேட்டு அறிந்த ஸ்பீட் தற்போது உலகக் கோப்பை போட்டிகளை பார்ப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார். ஸ்பீட் வந்ததை அறிந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, நான் விராட் கோலி போல் ஆட போகிறேன் என பேட்டிங் செய்வது போன்ற பல சேட்டைகளை ஸ்பீட் செய்து கொண்டிருக்கிறார்.

India Pakistan world cup match - Youtuber Speed visits India to support virat kohli

இந்த நிலையில் அவர் இந்தியாவில் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்திய ரூபாய் நோட்டை எடுத்து பார்த்தார். அதில் காந்தியின் புகைப்படம் இருந்தது. ஆனால் ஸ்பீடுக்கு அது யார் என்று தெரியவில்லை. உடனே கார் ஓட்டுநரிடம், இவர் யார்? விராட் கோலியின் தாத்தாவா என்று கேட்டார்.

உடனே ஓட்டுனர் இல்லை இது தேசத்தந்தை மகாத்மா காந்தி என்று பதில் அளித்தார். இப்படி வித்தியாசமாக பல காமெடிகளை ஸ்பீடு செய்வதில் வல்லவர். இந்த நிலையில் இந்திய ஜெர்சி அணிந்து கொண்டு இன்று ஸ்பீட் அகமதாபாத்தில் நடக்க உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண இருக்கிறார். இவர் அண்மையில் கடைசியாக தமிழ் படம் ட்ரைலரான லியோவை பார்த்து ரிவ்யூ செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 14, 2023, 11:47 [IST]
Other articles published on Oct 14, 2023
English summary
India Pakistan world cup match - Youtuber Speed visits India to support virat kohli என்னது கோலியின் தாத்தா காந்தியா? இந்தியாவில் கலக்கும் பிரபல யூடியூபர் ஸ்பீட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+