Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிக்கிற அடியில் 'பிய்ய'ப் போகுது.. இந்தியா - பாக். போட்டி குறித்து கியூரேட்டர்!

தரம்சலா, இமாச்சல் பிரதேசம்: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான டுவென்டி உலகக் கோப்பைப் போட்டியில் ரன் மழை பொழியும் வகையில் தரம்சாலா மைதான பிட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கியூரேட்டர் சுனில் செளகான் கூறியுள்ளார்.

இது பேட்டிங்குக்கு ஏற்ற அருமையான பிட்ச் என்று கூறியுள்ள அவர் மிகப் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தில் அழகிய மைதானம்தான் இந்த தரம்சலா. இங்கு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை டுவென்டி20 போட்டி நடைபெறவுள்ளது. இங்குள்ள பிட்ச்சை பேட்டிங்குக்கு சாதகமான முறையில் அமைத்துள்ளனராம்.

மார்ச் 19ம் தேதி

மார்ச் 19ம் தேதி

மார்ச் 19ம் தேதி இங்கு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இமயமலைத் தொடரின் கீழ் வரும் அழகிய எழில் கொஞ்சும் மைதானம்தான் தரம்சலா மைதானம். இமயமலையின் தெளலாதர் மலைத் தொடரில் தரம்சலா அமைந்துள்ளது.

அதிரடிக்கு வாய்ப்பு அதிகம்

அதிரடிக்கு வாய்ப்பு அதிகம்

இந்த மைதானத்தின் பிட்ச் குறித்து தலைமை கியூரேட்டர் சுனில் செளகான் கூறுகையில், டுவென்டி 20 போட்டி என்பது விறுவிறுப்பானது. இங்கு பேட்டிங்குக்குத்தான் அதிக மவுசு இருக்கும். அதை மனதில் கொண்டு பிட்ச் தயாரித்துள்ளோம்.

அடித்து நொறுக்கலாம்

அடித்து நொறுக்கலாம்

எனவே இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் இரு தரப்புமே அடித்து ஆட முடியும். எனவே பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம் என்றார் செளகான்.

பிட்ச்சின் தன்மை மாறாது

50 ஓவர்கள் வரை இந்த பிட்ச்சின் தன்மை மாறாது. எனவே போட்டி முழுவதும் ஒரே மாதிரியான தன்மையுடன்தான் இது இருக்கும். அதேசமயம், பிட்ச்சின் வெளிப் பகுதி விரைவிலேயே லேசாகி விடும் என்றும் செளகான் கூறினார்.

6 தகுதிச் சுற்றுப் போட்டிகள்

6 தகுதிச் சுற்றுப் போட்டிகள்

தரம்சலாவில் மார்ச் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை 6 தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதைத் தொடர்ந்து 18ம் தேதி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பைப் போட்டியும். 19ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் போட்டியும் நடைபெறும்.

Story first published: Tuesday, February 16, 2016, 16:19 [IST]
Other articles published on Feb 16, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+