For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா, ஆஸ்திரேலியா நாளை 3வது ஒருநாள் போட்டி.. பிளேயிங் லெவனில் மாற்றம் நிகழுமா? சென்னையில் மோதல்

சென்னை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இது இருக்கும்.

இந்த தொடரில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மிகவம் மோசமாக விளையாடி வருகிறார்கள். ஒரு முறை கூட இந்த தொடரில் அணியின் இலக்கு 200 ஐ கூட தொடவில்லை.

இதனால் இந்திய அணியின் டாப் வரிசை வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.

பெரிய குறை

பெரிய குறை

மிட்செல் ஸ்டார்க் பந்தை பார்த்தாலே கால் இரண்டம் பரத நாட்டியம் ஆடுகிறது. மேலும் ஸ்டம்பை நோக்கி வரும் இன் ஸ்விங் யாக்கர்களை எதிர்கொள்ள கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களே தடுமாறுகின்றனர். இந்த குறையை இனி அனைத்து அணிகளும் பயன்படுத்தி கொள்ளும். இதனால், இன் ஸ்விங் யாக்கர்களை பயன்படுத்தும் முறையை இந்திய வீரர்கள் எப்படியாவது கையாள வேண்டும்.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இதே போன்று சூர்யகுமார் யாதவ்க்கு நாளைய போட்டி தான் கடைசி வாய்ப்பாக இருக்கும். இதுவரை தொடர்ந்து 2 முறை கோல்டன் டக் என்பது, அவர் சந்தித்த பெரிய அவமானங்கள் ஆகும். நாளையும் சூர்யகுமார் சொத்ப்பினால் இனி, ஒருநாள் கிரிக்கெட் பக்கமே சூர்யகுமாரால் வர முடியாது.

பந்துவீச்சில் மாற்றம்?

பந்துவீச்சில் மாற்றம்?

விசாகப்பட்டினத்தில் இந்திய பந்துவீச்சாளர்களை ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் அடித்து நொறுக்கி விட்டார்கள். இதனால் , பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நாளை ஆட்டத்தில் ஷமி அல்லது சிராஜ் எதேனும் ஒருவருக்கு ஓய்வு வழங்கி விட்டு, ஆர்ஸ்தீப் சிங் அல்லது உம்ரான் மாலிக்கை ரோகித் சர்மா சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, சுப்மன் கில், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, கேஎல் ராகுல், 6, ஹர்திக் பாண்டியா, 7, ஜடேஜா, 8, முகமது ஷமி/ உம்ரான் மாலிக், 9, முகமது சிராஜ்/ ஆர்ஸ்தீப், 10, அக்சர் பட்டேல் 11, குல்தீப் யாதவ்

Story first published: Tuesday, March 21, 2023, 17:35 [IST]
Other articles published on Mar 21, 2023
English summary
india planning to play with same players in 3rd odi at chennai இந்தியா, ஆஸ்திரேலியா நாளை 3வது ஒருநாள் போட்டி.. பிளேயிங் லெவனில் மாற்றம் நிகழுமா? சென்னையில் மோதல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+