For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பையிலிருந்து விலகியது இந்தியா.. மாற்று தொடருக்கு திட்டம் போட்ட பிசிசிஐ.. முழு விவரம் இதோ

மும்பை : அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு இருநாட்டு அரசியல் காரணங்கள் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ அறிவித்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா வரவில்லை என்றால் அதே ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் வெளிநடப்பு செய்யும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா போர் கொடி தூக்கி உள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஏமாற்றம்

பாகிஸ்தானுக்கு ஏமாற்றம்

பாகிஸ்தான் வரவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை யார் தான் பார்ப்பார்கள் என்றும் அவர் ஏளனமாக பேசினார். இதற்கு பதிலடி தந்துள்ள இந்தியா, விளையாட்டு உலகில் இந்தியா முக்கியமான நாடாக விளங்குவதாகவும் ,இந்தியா இன்றி கிரிக்கெட் உலகில் எதுவும் நடைபெறாது என்றும் கூறியது.இந்த நிலையில் இந்தியாவை மிரட்டி பாகிஸ்தான் வர வைக்க அந்நாட்டு கிரிக்கெட் வரையும் எடுத்த முயற்சி தற்போது தோல்வியில் முடிய உள்ளது.

மாற்று ஏற்பாடு

மாற்று ஏற்பாடு

காரணம் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் வேறு கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆயத்தமாக வருகிறது. இதன் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்காமல் விலகுவது உறுதியாகியுள்ளது. அதாவது ஆகஸ்ட் செப்டம்பர் மாதம் இந்தியா விளையாடவில்லை என்றால் அந்த நேரத்தை பயன்படுத்தி இந்தியா கிரீன், இந்தியா ப்ளூ , இந்தியா ரெட் என மூன்று அணிகளை பிரித்து உள்ளூர் முத்தரப்பு போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

உலககோப்பை தொடர்

உலககோப்பை தொடர்

இதன் மூலம் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஒரு நல்ல பயிற்சிகரமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் 15 பேர் கொண்ட அணியில் எந்த வீரர்களை சேர்க்கலாம் என்று பரிசீலிக்க இந்த தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக இளம் வீரர்களுக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் வெகு நாட்களுக்கு பிறகு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளனர்.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

ரோகித் சர்மா ஒரு அணியின் கேப்டன் ஆகவும், கே எல் ராகுலை ஒரு அணியின் கேப்டனாகவும், ஷிகர் தவானை மற்றொரு அணியின் கேப்டன் ஆகவும் நியமித்து இந்த தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.முன்பு ஒரு காலத்தில் இதுபோன்று முத்தரப்பு ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடத்தப்படும். இதில் தோனி போன்ற வீரர்கள் எல்லாம் விளையாடி இருக்கிறார்கள். ஆனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அதிகமாக நடைபெறுவதால் தற்போது இந்த தொடர் நடத்த வாய்ப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 30, 2022, 23:46 [IST]
Other articles published on Nov 30, 2022
English summary
India plans to boycott asia cup and organize a domestic tri series ஆசிய கோப்பையிலிருந்து விலகியது இந்தியா.. மாற்று தொடருக்கு திட்டம் போட்ட பிசிசிஐ.. முழு விவரம் இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+